17
வரைவு முடுக்கம்
17.1 வருத்தமிகுதி கூறி
வரைவுகடாதல்
வருத்தமிகுதிகூறி வரைவுகடாதல் என்பது
அலரறிவுறுத்த தோழி, அலரானுங் காவன்மிகுதியானு நின்னை யெதிர்ப்பட மாட்டாதழுது வருந்தாநின்றவளிடத்து
நின்னருளிருக்கின்றவா றென்னோவெனத் தலைமகளது வருத்தமிகுதிகூறித் தலை மகனை வரைவு கடாவாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
250. எழுங்குலை வாழையின்
இன்கனி
தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
_____________________________________________________________
17.1. இரவுக் குறியிடத் தேந்திழைப்
பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
இதன் பொருள்: எழும் குலை
வாழையின் இன் கனி தின்று - எழாநின்ற குலைகளை யுடைய வாழைத்திரளின்கணுண்டாகிய இனிய கனிகளைத்
தின்று; இள மந்தி - இளைய மந்தி; செழுங்குலை வாழை அம் தண் நிழலில் துயில் சிலம்பா - வளவிய
குலையையுடைய அவ்வாழைத்திரளினது நல்ல குளிர்ந்த நிழற்கண் வெருவுதலின்றித் துஞ்சுஞ் சிலம்பை
யுடையாய்; முனைமேல் உழும் கொலை வேல் திருச்சிற்றம்பலவரை உன்னலர் போல் - போரிடத் துழுங்
கொலை வேலையுடைய திருச்சிற்றம்பலவரை நினையாதாரைப் போல; அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு
- வருந்தாநின்ற உலைத் தொழிலமைந்த வேல்போலுங் கண்ணை யுடையாட்கு; நின் அருள் வகை என்னோ
- நினதருட்கூறியாதோ? இவளதாற்றாமைக்கு மருந்தன்று எ-று.
நின்னருள்வகை யென்னோவென்பதற்கு
இவ்வாறு வருந்துமிவடிறத்து இனி நீ செய்யக்கருதிய வகை யாதோவெனினுமமையும். அழுங்கொலை வேலென்பது
பாடமாயின், அழாநின்ற கொலை வேல்போலுங் கண்ணையுடையாட்கென் றுரைக்க, எழுங்குலை - இளங்குலை.
செழுங்குலை-முதிர்ந்த குலை. எழுங் குலையு முதிர்ந்த குலையு முடைமையான் இடையறாது பழுக்கும் வாழைத்
திரளின்கணுண்டாகிய கனியை நுகர்ந்து, மந்தி வேறொன்றான் வெருவாது அவ்வாழை நிழலின்கீழின்புற்றுத்
துயிலுமாறுபோல, ஆராவின்ப மிடையிட்டு நுகராது நீ வரைந்து கோடலான் இடையறாத
|