| உ 
வரைவு முடுக்கம் 
    உழுங்கொலை வேல்திருச்
சிற்றம்பலவரை உன்னலர்போல்
 அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
 னோநின் னருள்வகையே.
 
250 
17.2 பெரும்பான்மைகூறி மறுத்தல்
 பெரும்பான்மைகூறி மறுத்தல் என்பது
வரைவுகடாவிய தோழிக்கு, யானவளைத் தெய்வமானுடமென்றறிந்து வரைந்து கோடற்கு இக்குன்றிடத்துத்
தோன்றாநின்ற விடம் தெய்வமகளிரதிடமோ, அன்றிக் குறத்தியரிடமோ, கூறுவாயாகவெனத் தலைமகன்
றலைமகளைப் பெரும்பான்மை கூறி மறுத்துரையா நிற்றல். அதற்குச் செய்யுள்-
 
251. பரம்பயன் தன்னடி யேனுக்குப்பார்விசும் பூடுருவி
 வரம்பயன் மாலறி யாத்தில்லை
 வானவன் வானகஞ்சேர்
 
___________________________________________________________ 
பேரின்பந்துய்த்து, அன்னைசொல்லா
லுண்ணடுங்காது நின்றாணிழற் கீழ் இவளின்புற்று வாழ்தல் வேண்டுமென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அச்சம்.
பயன்; வரைவுகடாதல். 
250 
17.2.  குலம்புரி கொம்பர்க்குச்சிலம்பன் செப்பியது.
 
 இதன் பொருள்: இக்
குன்றிடத்தே தோன்றும் இடம் - இக்குன்றிடத்துத் தோன்றுமிடம்; தில்லை வானவன் வானகம் சேர்
அரம்பையர் தம் இடமோ-தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர் தமதிடமோ; அன்றி
வேழத்தின் என்பு நட்ட குரம்பையர் தம் இடமோ-அன்றி யானையினென்பை வேலியாக நட்ட குரம்பைகளையுடைய
குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக, எ-று.
 
 பரம் - எல்லாப்பொருட்கும்
அப்பாலாயவன்; தன் அடியேனுக்குப் பயன்-ஆயினுந் தன்னடியேற்குப் பெறும்பயனாயுள்ளான்;  பார்
விசும்பு ஊடுருவி வரம்பு அயன் மால் அறியாத் தில்லை வானவன் - பாரையும் விசும்பையு மூடுருவிநிற்றலாற்
றன்னெல்லையை அயனு மாலு மறியாத தில்லையின் வானவனெனக் கூட்டுக.
 |