பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
441

அரம

வரைவு முடுக்கம்

    அரம்பையர் தம்மிட மோஅன்றி
        வேழத்தி னென்புநட்ட
    குரம்பையர் தம்மிட மோஇடந்
        தோன்றுமிக் குன்றிடத்தே.

251

17.3 உள்ளது கூறிவரைவு கடாதல்

   
உள்ளது கூறி வரைவுகடாதல் என்பது பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு, இவ்விடம் எந்தையது முற்றூட்டு;  எமக்குற்றார் குறவரே; எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே;  யாங்களும் புனங்காப்போஞ்சிலர்;  நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்கவேண்டுவதில்லையெனப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

252. சிறார்கவண் வாய்த்த மணியிற்
        சிதைபெருந் தேனிழுமென்
    றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
        உந்து மிடமிதெந்தை

________________________________________________

என்றது அவளை யெட்டவுஞ் சுட்டவும் படாத தெய்வமென் றிருத்தலான், அவள் வாழு மிடத்தை அரம்பையரிடமென்றே கருதுவல், அன்றாயி னுரையென வரைவுடம்படாது கூறியவாறு. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: இரவுக்குறியிடமுணர்த்துதல்.

251

17.3.  இன்மை யுரைத்த மன்ன னுக்கு
     மாழை நோக்கி தோழி யுரைத்தது.

   
இதன் பொருள்: சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெருந்தேன்-சிறார்கையிற் கவண் தப்பாமல் அதுவிட்ட மணியாற் சிதைந்த பெருந்தேன்;  இழு மென்று-இழுமென்னு மோசையை யுடைத்தாய்;  இறால் கழிவுற்று எம் சிறுகுடில் உந்தும் இடம் இது-இறாலினின்றுங் கழிதலையுற்று எமது சிறு குடிலைத் தள்ளுமிவ்விடம்; எந்தை உறாவரை-எந்தையது முற்றூட்டு; உற்றார் குறவர்-எமக்குற்றார் குறவர்; பெற்றாளும் கொடிச்சி-எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே;  உம்பர் பெறா அருள் அம்பலவன் மலைப்பெரும் புனம் காத்தும்-யாமும் தன்னன்பரல்லது உம்பர்பெறாத வருளையுடைய அம்பலவனது மலைக்கட் பெரும்புனத்தைக்காத்தும்;  அதனால் நீயிர்