பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
442

உற

வரைவு முடுக்கம்

    உறாவரை யுற்றார் குறவர்பெற்
        றாளுங் கொடிச்சிஉம்பர்
    பெறாவரு ளம்பல வன்மலைக்
        காத்தும் பெரும்புனமே.

252

17.4 ஏதங்கூறியிரவரவுவிலக்கல்

   
ஏதங்கூறியிரவரவுவிலக்கல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாய தோழி, நீ வரைவொடு வாராயாயிற் சிங்கந் திரண்டு தனக்கியானையாகிய வுணவுகளைத்தேடு மிருளின்கண், நினது கைவேல் துணையாக நீவந்தருளாநின்ற விஃதே எங்களுக்குத் துன்பமாகத் தோன்றாநின்றது. இனியிவ்விருளிடைவாரா தொழிவாயென ஏதங்கூறித் தலைமகனை யிரவரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-

253. கடந்தொறும் வாரண வல்சியின்
        நாடிப்பல் சீயங்கங்குல்
    இடந்தொறும் பார்க்கும் இயவொரு
        நீயெழில் வேலின்வந்தால்

____________________________________________________________

வரைவுவேண்டாமையி னெம்மைப் புனைந்துரைக்க வேண்டுவதில்லை எ-று.

    “கோவையுந் தொகையு மாவயின் வரையார்” என்பதனான், இது தொடர்நிலைச் செய்யுளாதலிற் குரம்பையர் தம்மிடமோவென்று வினாவப்பட்ட விடம் எஞ்சிறுகுடிலுந்துமிட மெனவும் ஒருபுனத்தைச் சுட்டி இதெந்தையுறாவரை யெனவுங் கூறினாளாக வுரைப்பினு மமையும். சிறாரெறிந்த மணியாற் பெருந்தேன் சிதைந்து அவ்விறாலைவிட்டுக் கழிந்து, சிறுகுடிலிற் பரந்தாற் போல, அயலார் கூறும் அலரான் நுமது மறைந்தவொழுக்கம் நும் வயினடங்காது பலருமறிய வெளிப்படாநின்றதென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: குறியிடமுணர்த்துதல்.

252

17.4.  இரவரு துயரம் ஏந்தலுக் கெண்ணிப்
      பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.

   
இதன் பொருள்: பல் சீயம் வாரண வல்சியின் நாடி - பலவாகிய சீயம் வாரணமாகிய வல்சி காரணமாகத்தேடி; கங்குல் கடம் தொறும்