படந
வரைவு முடுக்கம்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென்
பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.
253
_____________________________________________________________
இடம் பார்க்கும் இயவு-கங்குற்
பொழுதின்கட் காடுக டோறுங் காட்டினிடங்கடோறுஞ் சென்று பார்க்கு நெறியின்கண்; ஒரு நீ எழில்
வேலின் வந்தால் - தனியையாகிய நீ எழிலையுடைய வேல் துணையாக வந்தால்; அன்ப - அன்பனே; நின்
அருள் எம்மைத் தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே தோன்றுவது - எம்மிடத்துண்டாகிய நின்னருள் எம்மைவிடாதே
தொடர்ந்தொறுக்குந் துன்பமென்னு முணர்வே எமக்குத் தோன்றுவது எ-று.
படம் தொறும் தீ அரவன் அம்பலம்
பணியாரின் எம்மை ஒறும்-படந்தொறுமுண்டாகிய தீயையுடைய அரவை யணிந்தவன தம்பலத்தைப் பணியாதாரைப்
போல வருந்த எம்மை யொறுக்கு மெனக்கூட்டுக.
என்றது, எமக்கு நீ செய்யுந்
தலையளியை யாங்கள் துன்பமாகவே யுணராநின்றோம் என்றவாறு. நாடுதல் - மனத்தாலாராய்தல், பார்த்தல்
-கண்ணா னோக்குதல், வேலினென்னு மைந்தாவது ஏதுவின்கண் வந்தது. ஒறுக்குமென்பது ஒறுமென விடைக்
குறைந்து நின்றது. எம்மை நீ விடாது தொடருந்தொறு மெனினுமமையும். இதற்குத் தொடரு மென்பது இடைக்குறைந்து
நின்றது. நின்னரு ளென்னு மெழுவாய் துன்பமென்னும் பயனிலை கொண்டது. மெய்ப்பாடு: அச்சம். பயன்:
இரவுக்குறிய தேதங்காட்டி வரைவு கடாதல்.
253
|