பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
445

New Page 1

வரைவு முடுக்கம்

    டொளிறுற்ற மேனியன் சிற்றம்
        பலம்நெஞ் சுறாதவர்போல்
    வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
        நீசெய்யும் மெய்யருளே.

254

17.6 தொழுதிரந்துகூறல்

   
தொழுதிரந்து கூறல் என்பது பகல்வரவு விலக்கின தோழி, இவனிரவுவரவுங் கூடுமென வுட்கொண்டு, நின்னை யெதிர்ப்பட வேண்டி அழுது வருந்தாநின்ற இவள் காரணமாக, அரிக்கும் யாளிக்கும் வெருவி யானைகள் திரண்டு புடைபெயராத மிக்க விருளின்கண் வாராதொழிவாயாக வென்று, நின் கழல்களைக் கையாற்றொழுது, நின்னை யிரந்தேனென வரைவு தோன்றத் தலைமகனைத் தொழுதிரந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

255. கழிகட் டலைமலை வோன்புலி
        யூர்கரு தாதவர்போல்
    குழிகட் களிறு வெரீஇ அரி
        யாளி குழீஇவழங்காக்

______________________________________________________________

17.6.  இரவரவின் ஏதமஞ்சிச்
     சுரிதருகுழற் றோழிசொல்லியது.

   
இதன் பொருள்: பொழிகட் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டு - பொழியாநின்ற கண்ணிற் புனலையுடையதோர் மயில்போலத் துவளாநின்ற விவள் காரணமாக; அரியாளி வெரீஇ - அரியையும் யாளியையும் வெருவி; குழி கண் களிறு-குழிந்த கண்ணை யுடையவாகிய யானைகள்; குழீஇ - ஓரிடத்தே திரண்டு நின்று; வழங்கா - அவ்விடத்து நின்றும் புடைபெயராத; கழி கட்டிரவின் வரல் - சிறந்த வச்சத்தைச் செய்யு மிரவின்கண் வாராதொழிவாயாக; கழல் கை தொழுது இரந்தேன்-நின்கழல்களைக் கையாற்றொழுது நின்னையிரந்தே னிதனை எ-று.

   
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் வெரீஇ -கழிந்த கண்ணையுடைய தலைமாலையைச் சூடுவோனது புலியூரைக் கருதாதாரைப் போல வெருவியெனக்கூட்டுக.