பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
446

கழ

வரைவு முடுக்கம்

    கழிகட் டிரவின் வரல்கழல்
        கைதொழு தேயிரந்தேன்
    பொழிகட் புயலின் மயிலின்
        துவளு மிவள்பொருட்டே.

255

17.7 தாயறிவுகூறல்

   
தாயறிவு கூறல் என்பது தொழுதிரந்து கூறவும், வேட்கை மிகவாற் பின்னுங் குறியிடைச்சென்று நிற்ப, அக்குறிப்பறிந்து, நங்கானலிடத்து அரையிரவின்கண் ஒரு தேர்வந்த துண்டாகக் கூடுமெனவுட்கொண்டு, அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து என்னையும் பார்த்தாள்; இருந்தவாற்றான் இவ்வொழுக்கத்தை யறிந்தாள்போலுமெனத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவுதோன்றத் தாயறிவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

256. விண்ணுஞ் செலவறி யாவெறி
        யார்கழல் வீழ்சடைத்தீ
    வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
        கானல் அரையிரவின்

________________________________________________

குழிவழங்காவென்று பாடமோதி, அரியையும் யாளியையுங் குழியையும் வெருவி வழங்காவென்றுரைப்பாருமுளர். கழி - அச்சத்தைச்செய்யு மியல்பாற் சிறத்தல், கழிகட்டி ரவினென்பதற்குக் கழி சிறப்பின்கண் வந்து அரையிரவின்கணென்பது பட நின்றதெனினுமையும். பொழிகட் புயலின் மயிலிற் றுவளு மென்றதனால், இவ்வாறிவளாற்றாளெனினும் நீ வரற்பாலையல்லையென்று கூறி வரைவு கடாவினாளாம். வழியிடை வரு மேதங் குறித்து இவ்வாறாகின்ற விவள்பொருட்டென் றுரைப்பினுமமையும். கருதார் மனம்போல் என்பது பாடமாயின், மனம்போலுங் கழிகட்டிரவெனவியையும், மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறிவிலக்கி வரைவு கடாதல்.

255

17.7.  சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப
     வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.


   
இதன் பொருள்: கார் மயிலே - கார்காலத்து மயிலை யொப்பாய்; தில்லை மல் எழில் கானல் - தில்லையில் வளவிய வெழிலையுடைய கானலிடத்து; அரை இரவின் மணி அண்ணல் நெடுந் தேர் வந்தது