அண
வரைவு முடுக்கம்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே.
256
17.8 மந்திமேல்வைத்து
வரைவுகடாதல்
மந்திமேல்வைத்து வரைவுகடாதல் என்பது
சிறைப்புறமாகத் தாயறிவுகூறிச் சென்றெதிர்ப்பட்டு, ஒரு கடுவன் றன்மந்திக்கு மாங்கனியைத் தேனின்கட்டோய்த்துக்
கொடுத்து நுகர்வித்துத் தம்முளின்புறுவதுகண்டு, இது நங்காதலர்க்கு நம்மாட்டரிதாயிற்றென நீ
வரையாமையை நினைந்தாற்றா- ளாயினாளென மந்திமேல் வைத்துத் தலைமகளது வருத்தங்கூறி வரைவு கடாவாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
257. வான்றோய் பொழிலெழின்
மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
_____________________________________________________________
உண்டாம் என - அரையிரவின்கண்
மணிகளை யுடைய தலையாய தொரு நெடுந்தேர் வந்ததுண்டாகக்கூடுமென வுட்கொண்டு; அன்னை சிறிது கண்ணும்
சிவந்து - அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து; என்னையும் நோக்கினள் - என்னையும் பார்த்தனள்;
இருந்த வாற்றான் இவ்வொழுக்கத்தினை யறிந்தாள் போலும்! எ-று.
விண்ணும் செலவு அறியா-விண்ணுளாரானும்
எல்லாப் பொருளையுங் கடந்தப்பாற்சென்ற செலவையறியப்படாத; வெறி ஆர் கழல் வீழ் சடைத்தீ
வண்ணன்-நறு நாற்றமார்ந்த கழலினையுந் தாழ்ந்த சடையினையுமுடைய தீவண்ணன்; சிவன் - சிவன்; தில்லை
- அவனது தில்லையெனக் கூட்டுக.
எல்லாப் பொருளையுங்கடந்து நின்றனவாயினும்,
அன்பர்க் கணியவாய் அவரிட்ட நறுமலரான் வெறிகமழுமென்பது போதர வெறியார் கழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: படைத்து மொழியால் வரைவுகடாதல்.
256
17.8. வரிவளையை வரைவுகடாவி
அரிவைதோழி உரைபகர்ந்தது.
இதன் பொருள்: நீள்
திருமுடிமேல் மீன் தோய் புனல் பெண்ணை
|