ம
வரைவு முடுக்கம்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை
மாநகர்
போலும் வரிவளையே.
257
_____________________________________________________________
வைத்து-நீண்ட திருமுடிக்கண் மீனைப்பொருந்திய
புனலாகிய பெண்ணை வைத்து; உடையாளையும் மேனி வைத்தான் வான் தோய் மதில் தில்லை மாநகர்
போலும் வரிவளை-எல்லாவற்றையு முடையவளையுந் திருமேனிக்கண் வைத்தவனது வானைத்தோயு மதிலையுடைய
தில்லையாகிய பெரியநகரை யொக்கும் வரிவளை; வான் தோய் பொழில் எழில் மாங்கனி-வானைத் தோயும்
பொழிலின் கணுண்டாகிய நல்லமாங்கனியை; கடுவன் தேன் தோய்த்து மந்தியின் வாய் அருத்தி மகிழ்வ
கண்டாள்-கடுவன் தேனின் கட்டோய்த்து மந்தியின்வாய்க் கொடுத்து நுகர்வித்துத் தம்மு
ளின்புறுமவற்றைக் கண்டாள் எ-று.
என்றதனால், துணைபுறங்
காக்குங் கடுவனைக்கண்டு, விலங்குகளுமிவ்வாறு செய்யாநின்றன; இது நங்காதலர்க்கு நம் மாட்டரிதாயிற்றென
நீ வரையாமையை நினைந்தாற்றாளாயினாளென்றாளாம். அருத்தி என்பதற்கு நெடுஞ் சுரநீந்தி (தி.8
கோவை பா. 247) என்றதற் குரைத்ததுரைக்க. கான்றோய் பொழிலென்பதூஉம் பாடம். வரிவளையை
வரைவு-வரிவளையை வரைதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: வரைவுகடாதல்.
257
|