பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
449

17

வரைவு முடுக்கம்

17.9 காவன் மேல்வைத்துக் கண்டுயிலாமைகூறல்

   
காவன் மேல்வைத்துக் கண்டுயிலாமை கூறல் என்பது மந்திமேல்வைத்து வரைவுகடாவப்பட்ட தலைமகன், இது நங்காதலி யிடத்து நமக்கரிதாயிற்றெனத் தானுமாற்றானாய்,  இரவுக்குறிச் சென்று நிற்ப, அந்நிலைமைக்கண் இவ்விடத்துள்ளார், இவள் காவற்பறை கேட்குந் தோறுங் கண்டுயிலாமைக்குக் காரணமென்னோவெனத் தம்முட் கூறாநிற்றல். இதுவுஞ் சிறைப்புறமாக வரைவுகடாதலைப் பயக்கும். அதற்குச் செய்யுள்-

258. நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
        நாடக மாடுதில்லைச்
    சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
        காக்குஞ்செவ் வேலிளைஞர்

______________________________________________________________

17.9.  நகர் காவலின்
     மிகுகழி காதல்.

   
இதன் பொருள்: நறை கள் மலி கொன்றையோன் - நறு நாற்றத்தையுடைய தேன்மலிந்த கொன்றையையுடையவன்; நின்று நாடகம் ஆடு தில்லைச் சிறைக்கண் - நின்று கூத்தாடுந் தில்லையாகிய சிறையிடத்து; மலி புனல் சீர் நகர் காக்கும் - அது பொறாமன் மிகும்புனலையுடைய சீரியநகரை இராப்பொழுதின்கட் காக்கும்; செவ்வேல் இளைஞர் பறைக்கண் படும் படும் தோறும் - செவ்வேலையுடைய இறைஞரது பறைக்கண் படுந்தோறும் படுந்தோறும்; படாமுலைப் பைந்தொடியாள் - படக்கடவவல்லாத முலையையுடைய பைந்தொடியாளுடைய; கறை கண் மலி கதிர் வேற் கண்-கறை தன்கண் மிக்க கதிர்வேல் போலுங்கண்கள்; படாது கலங்கின-ஒரு காலும் படாவாய் வருந்தின எ-று.

   
நாடகமென்றது ஈண்டுக் கூத்தென்னுந் துணையாய் நின்றது. கலங்கினவென்பதற்குத் துயிலாமையான் நிறம்பெயர்ந்தன வென்றும் அழுதுகலங்கினவென்று முரைப்பாருமுளர். காவன்மிகுதியும் அவளதாற்றாமையுங்கூறி வரைவுகடாயவாறு. இஃதின்னார் கூற்றென்னாது துறை கூறிய கருத்து. மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவுகடாதல்.

258