பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
450

வரைவு முடுக்கம்

    பறைக்கண் படும்படுந் தோறும்
        படாமுலைப் பைந்தொடியாள்
    கறைக்கண் மலிகதிர் வேற்கண்
        படாது கலங்கினவே.

258

17.10 பகலுடம்பட்டாள் போன்று இரவரவுவிலக்கல்

   
பகலுடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல் என்பது சிறைப்புறமாகக் கண்டுயிலாமைகேட்ட தலைமகன், ஆதரவு மிகவாலெதிர்ப்படலுற்றுநிற்பத் தோழி யெதிர்ப்பட்டு, நீவந்தொழுகா நின்ற இப் புலராவிரவும் பொழியாமழையும் புண்ணின்க ணுழையும் வேல்மலராம்படியெங்களை வருத்தா நின்றன; இதற்கொரு மருந்தில்லையோ நும்வரையிடத்தெனப் பகலுடம்பட்டாள் போன்றிர வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

259. கலரா யினர்நினை யாத்தில்லை
        அம்பலத் தான்கழற்கன்
    பிலரா யினர்வினை போலிருள்
        தூங்கி முழங்கிமின்னிப்

______________________________________________________________

17.10.  விரைதரு தாரோய்
      இரவர லென்றது.

   
இதன் பொருள்: கலர் ஆயினர் நினையாத் தில்லை அம்பலத்தான் கழற்கு - தீமக்களாயுள்ளார் கருதாத தில்லையம்பலத்தா னுடைய திருவடிகட்கு; அன்பு இலர் ஆயினர் வினைபோல் இருள் தூங்கிப் புலரா இரவும்-அன்புடையரல்லாதாரது தீவினை போல இருள் செறிந்து புலராதவிரவும்; மின்னி முழங்கிப் பொழியா மழையும் - மின்னி முழங்கிப் பொழிவது போன்று பொழியாத மழையும்; புண்ணில் நுழை வேல் மலரா வரும் - எமக்குப் புண்ணின்கணுழையும்வேல் மலராம்வண்ணங் கொடியவாய் வாராநின்றன; மருந்தும் இல்லையோ நும் வரையிடத்து - இதற்கொரு மருந்து மில்லையோ நும்வரையிடத்து! எ-று.

   
மருந்தென்றமையான் வரையிடத்தென்றாள். ஒரு நிலத்துத் தலைமகனாதலின், நும்வரையாகிய இவ்விடத்திதற்கோர் மருந்