பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
451

புலர

வரைவு முடுக்கம்

புலராஇரவும் பொழியா
        மழையும்புண் ணில்நுழைவேல்
    மலரா வரும்மருந் தும்மில்லை
        யோநும் வரையிடத்தே.

259

17.11 இரவுடம்பட்டாள்போன்று பகல்வரவு விலக்கல்

   
இரவுடம் பட்டாள்போன்று பகல்வரவு விலக்கல் என்பது இவள் மருந்தில்லையோவென்றது, யான் இரவுக்குறிச்செல்லின் மழைக்காலிருளா- னெதிர்ப்படலருமையான் வேட்கை யுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென வுட்கொண்டு, பகற்குறிச் செல்லா நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, பகல்வந்தருளாநின்றது அவளுக்கு வருத்தமுறும் படியாக மிக்க வலராகாநின்றது; அதனாற் பகற்குறி வரற்பாலை யல்லையென, இரவுக்குறி யுடம்பட்டாள் போன்று பகற்குறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

260. இறவரை உம்பர்க் கடவுட்
        பராய்நின் றெழிலியுன்னிக்
    குறவரை ஆர்க்குங் குளிர்வரை
        நாட கொழும்பவள

________________________________________________

தில்லையோவென ஓருலக வழக்காகவுரைப்பினுமமையும். வருத்துதலேயன்றித் தணித்தலு முண்டோவென்பதுபட நின்றமையின், மருந்து மென்னுமும்மை; எச்சவும்மை. இரவின்கண் வந்தொழுகா நிற்பவும், இரவுறு துயரந் தீர்க்கு மருந்தில்லையோ வென்று கூறினமையான், வரைவல்லது இவ்வாறொழுகுதல் அதற்கு மருந்தன்றென்று கூறினாளாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறி விலக்குதல்.

17.11.  இகலடு வேலோய்
      பகல்வர லென்றது.


   
இதன் பொருள்: இற - தொடர்ந்து பெய்யாதிறுதலான்; எழிலி உன்னி-எழிலிபெய்தலை நினைந்து; வரை உம்பர்க் கடவுள் பராய் - மலைமேலுறையுந் தெய்வங்களைப் பராவி; குறவர் நின்று ஆர்க்கும் குளிர் வரை நாட - குறவர் நின்றார்ப்பரவஞ்செய்யுங் குளிர்ந்த வரைமே லுண்டாகிய நாட்டை யுடையாய்; கொழும் பவள நிறவரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் உற - கொழுவிய