பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
452

வரைவு முடுக்கம்

    நிறவரை மேனியன் சிற்றம்
        பலம்நெஞ் சுறாதவர்போல்
    உறவரை மேகலை யாட்கல
        ராம்பக லுன்னருளே.

260

______________________________________________________________

பவளமாகிய நிறத்தையுடைய வரை போலுந் திருமேனியை யுடையவனது சிற்றம்பலத்தை நினையாதவரைப்போல வருந்த; அரை மேகலையாட்குப் பகல் உன் அருள் அலராம் - அரைக்கணிந்த மேகலையையுடையாட்குப் பகலுண்டாமுனதருள் மிக்க வலராகா நின்றது; அதனானீவாரல் எ-று.

    குறவரையென்புழி, ஐகாரம்; அசைநிலை. அசைநிலை யென்னாது குறமலையென் றுரைப்பாரு முளர். வரையையுடைய நாடெனினு மமையும். குறவர் பரவும் பருவத்துத் தெய்வத்தைப் பரவாது, பின் மழை மறுத்தலா னிடர்ப்பட்டு அதனை முயல்கின்றாற் போல, நீயும் வரையுங்காலத்து வரையாது, இவளை யெய்துதற்கரிதாகியவிடத்துத் துன்புற்று வரைய முயல்வையென உள்ளுறை காண்க.

    “உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
     கொள்ளு மென்ப குறியறிந் தோரே”

(தொல். அகத்திணையியல்-50) என்பவாகலிற் றெய்வத்தை நீக்கி யுவமைகொள்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறி விலக்குதல்.

260