பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
454

17

வரைவு முடுக்கம்

17.13 காலங்கூறி வரைவுகடாதல்

   
காலங்கூறி வரைவுகடாதல் என்பது இருபொழுதும் வரவு விலக்கின தோழி, மதி நிரம்பாநின்றது; வேங்கை பூவாநின்றன; இனி நினக்கு வரைவொடு வருதற்குக் காலமிதுவெனக் காலங்கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

262. மையார் கதலி வனத்து
        வருக்கைப் பழம்விழுதேன்
    எய்யா தயின்றிள மந்திகள்
        சோரும் இருஞ்சிலம்பா
    மெய்யா அரியதெ னம்பலத்
        தான்மதி யூர்கொள்வெற்பின்
    மொய்யார் வளரிள வேங்கைபொன்
        மாலையின் முன்னினவே.

262

_____________________________________________________________

17.13.  முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
      வரைதரு கிளவியில் தெரிய வுரைத்தது.


   
இதன் பொருள்: மை ஆர் கதலி வனத்து வருக்கைப் பழம் விழுதேன்-இருளார்ந்த வாழைக்காட்டின்கண் வருக்கைப்பலாவின் பழம்விழுதலா னுண்டாகியதேனை; இள மந்திகள் எய்யாது அயின்று சோரும் இருஞ் சிலம்பா-இளையமந்திகளறியாதே யுண்டு பின் களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய்; மதி ஊர்கொள் - மதி நிரம்பாநின்றது; அம்பலத்தான் வெற்பின் - அம்பலத்தானுடைய இவ்வெற்பின்கண்; மொய் ஆர் வளர் இளவேங்கை பொன் மாலையின் முன்னின - செறிவார்ந்த வளராநின்ற விளைய வேங்கைகள் பூத்துப் பொன்மாலைபோலத் தோன்றின; மெய்யா அரியது என்-இனி மெய்யாக வுனக்கரிய தியாது! எ-று.

   
கதலிவனத்துண்டாகிய தேனென்றதனாற் கதலிக்கனியொடு கூடுதல் பெற்றாம். ஊர்கோடல்-குறைவின்றி மண்டலமாக வொளிபரத்தல். அல்லதூஉம் பரிவேடித்தலெனினுமமையும். நின்மலைக்கண் விலங்குகளு மித்தன்மைத்தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புறாநின்றனவாகலிற் குறித்தவற்றினினக்கரிய தியாது இதுவன்றோ பருவமுமென வரைவு பயப்பக் கூறியவாறாயிற்று. மந்திகடேருமென்பது பாடமாயின், தேனை யறியாதுண்டு அதன் சுவை மிகுதியாற் பின்னதனைத் தேர்ந்துணரு