17
வரைவு முடுக்கம்
17.14 கூறுவிக்குற்றல்
கூறுவிக்குற்றல் என்பது காலங் கூறி
வரைவு கடாவவும் வரைவுடம்படாமையின் அவடன்னைக் கொண்டே கூறுவிப்பாளாக, அலரான் வருநாணினையுங்
காணாமையான் வருமாற்றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலை நம்மாற் றலையளிக்கப்படுவார் இவ்வாறு
வருந்துத றகாதெனக் தாமாகவறி கின்றிலராயின் நாஞ்சொல்லுந் தன்மைகளென்னோவெனப் புலந்து,
நீயாகிலுஞ்சென்று கூறென்பது குறிப்பாற்றோன்றத் தலைமகன் வரைவுடம்படாமையைத் தோழி தலைமகட்குக்
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
263. தேமாம்
பொழிற்றில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
________________________________________________________________
மென்றுரைக்க. வேட்ட பொருள் உள்ளத்து
முற்பட்டுத் தோன்றுதலின், வரைவை முந்தியபொருளென்றாள். வரைதருகிளவி - வரையுங் கிளவி. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்:
வரைவுகடாதல்.
262
17.14. ஒத்த தொவ்வா துரைத்த
தோழி
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக்
குற்றது.
இதன் பொருள்: தேமாம்
பொழில் தில்லைச் சிற்றம்பலத்து-தேமாம் பொழிலையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; விண்ணோர்
வணங்க நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின் - விண்ணோர்வணங்கவும் நாம்
விரும்பவுங் கூத்தைச் செய்வானைச் சேராதாரைப்போல வருந்த; வாம் மாண்கலை செல்ல நின்றார்
கிடந்த நம் அல்லல் கண்டால்-அழகு மாட்சிமைப்பட்ட மேகலை கழலும் வண்ணங் கண்டு தலையளி செய்யாது
நின்றவர் பெருகிக் கிடந்த நம்மல்லலைக்கண்டால்; தாமா அறிகிலர் ஆயின்-நம்மாற் றலையளிக்கப்படுவார்
இவ்வாறு வருந்துதறகாதென்று தாமாகவறிகின்றிலராயின்; நாம் சொல்லும் தன்மைகள் என்-நாஞ்சொல்லுமியல்புகளென்! எ-று.
வாமம் வாமென விடைக் குறைந்து
நின்றது. அலரான்வரு நாணினையுங், காணாமையான் வருமாற்றாமையையும் பற்றிக்
|