பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
456

வரைவு முடுக்கம்

    வாமாண் கலைசெல்ல நின்றார்
        கிடந்தநம் அல்லல்கண்டால்
    தாமா அறிகில ராயினென்
        னாஞ்சொல்லுந் தன்மைகளே.

263

17.15 செலவுநினைந்துரைத்தல்

   
செலவுநினைந்துரைத்தல் என்பது வரைவுடம்படாமையிற் றோழி தலைமகனோடு புலந்து கூறக்கேட்டு, அக்குறிப்பறிந்து, இக்கல்லதரின்க ணீர்வந்தவா றென்னோவென்று வினவுவாரைப் பெற்றேமாயின் இத்தன்மையையுடைத்தாகிய மிக்க விருளின்கண் யாமவருழைச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்வா ரில்லையெனத் தலைமகள் செலவுநினைந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

264. வல்சியி னெண்கு வளர்புற்
        றகழமல் கும்மிருள்வாய்ச்
    செல்வரி தன்றுமன் சிற்றம்
        பலவரைச் சேரலர்போற்

________________________________________________________________

கிடந்த நம்மல்லலென்றாள். ஒத்ததொவ்வா தென்பதனை ஒத்துமொவ்வாம லெனத் திரிக்க. அஃதாவது இராவருதலுடம்பட்டாள் போன்று பகல்வார லென்றலும், பகல்வருத லுடம்பட்டாள் போன்று இராவார லென்றலும், பின் இருபொழுதையு மறுத்தலும்.

263

17.15.  பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
      தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.

   
இதன் பொருள்: கார் மயிலே - கார்காலத்து மயிலை யொப்பாய்; சிற்றம்பலவரைச் சேரலர் போல் - சிற்றம்பலவரைச் சேராதாரைப் போல வருந்த; சீயம் கொல் கரி குறுகாவகை பிடி தான் இடைச் செல்கல்லதர் - சீயங் கொல்கரியைச் சென்றணையாத வண்ணம் பிடிதானிரண்டற்கு மிடையே சென்று புகுங் கல்லதரின்கண்; வந்தவாறு என் என்பவர்ப் பெறின் - நீர் வந்தவா றெங்ஙனேயென்று சொல்லுவாரைப் பெற்றேமாயின்; வல்சியின் எண்கு வளர்புற்று அகழ மல்கும் இருள்வாய்-குரும்பியாகிய வுணவுகாரணமாகக் கரடி உயர்ந்த புற்றை யகழாநிற்ப மிகாநின்ற விருளின்கண்; செல்வு