ந
வரைவு முடுக்கம்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.
265
______________________________________________________________
அளிக்கும் விழுமலை நாட - வரையின்வாழுமகளிர்
வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரி திரையின்
நாரிக்கு அளிக்க அமர் - விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய;
நல் மாச் சடைமுடி நம்பர் தில்லை ஏர் இக்களிக் கரு மஞ்ஞை-நல்ல பெரிய சடைமுடியையுடைய நம்பரது
தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இந்நீர்மை எய்துவதுஎன் -
தன்றன்மையை யிழந்து இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை எ-று.
மலையையுடைய நாடெனினுமமையும்.
விரிதிரையினென்பது அல்வழிச்சாரியை. விரிதிரையையுடைய நாரியெனினுமமையும். நாரிக்களித்தம ரென்பது
பாடமாயின், நாரிக்களித்தலான் அவளமருஞ்சடை யென்றுரைக்க. களிக்கரு மஞ்ஞை - களியை யுடைய கரிய
மஞ்ஞை. அணைதற்கரிய களிற்றின் மருப்பினின்று முக்க முத்தத்தின தருமையைக் கருதாது தமக்கின்பஞ்
செய்யும் வேரிக்குக் கொடுத்தாற் போல, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாகிய விவளதருமை
கருதாது நினக்கின்பஞ் செய்யுங் களவொழுக்கங் காரணமாக இகழ்ந்து மதித்தாயென உள்ளுறை காண்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
265
வரைவுமுடுக்கம் முற்றிற்று.
|