18
18. வரைபொருட்பிரிதல்
வரைபொருட் பிரிதல் வருமாறு:-
முலைவிலை கூறல் வரைவுடம் படுத்தல்
வரைபொருட் கேகலை யுரையவட் கென்ற
னீகூ றென்றல் சொல்லா தேகல்
பிரிந்தமை கூற னெஞ்சொடு கூற
னெஞ்சொடு வருந்தல் வருத்தங்கண்
டுரைத்தல்
வற்புறுத் தல்லொடு வன்புறை யழிதல்
வாய்மை கூறன் மன்னவன் மெய்யுரை
தேறாது புலம்பல் காலமறைத் துரைத்த
றூதுவர வுரைத்த றூதுகண் டழுங்கன்
மெலிவு கண்டு செவிலி யுரைத்தல்
மேவிய செவிலி கட்டுவைப் பித்தல்
கலக்குற்று நிற்றல் கட்டுவித்தி
கூறல்
வேலனை யழைத்த லின்ன லெய்தல்
விலக்க நினைத்த னிலைமை யுரைத்த
லறத்தொடு நிற்ற லையந் தீர்த்த
லவன்வெறி விலக்கல் செவிலிக்குத்
தோழி
யறத்தொடு நிற்ற னற்றாய்க்குச்
செவிலி
யறத்தொடு நிற்ற றேர்வர வுரைத்தன்
மணமுரசு கேட்டு மகிழ்ந்து ரைத்த
லையுற்றுக் கலங்க லவனிதி காட்ட
லாறைந் துடனே கூறிய மூன்றும்
விரைமலர்க் குழலாய் வரைபொருட்
பிரிதல்.
________________________________________________________________
வரைபொருட்பிரிதல் -
இதன் பொருள்: முலைவிலைகூறல்,
வருமது கூறிவரைவுடம்படுத்தல், வரைபொருட்பிரிவையுரையெனக்கூறல், நீயேகூறென்றல், சொல்லாதேகல்,
பிரிந்தமைகூறல், நெஞ்சொடு கூறல், நெஞ்சொடுவருந்தல், வருத்தங்கண்டுரைத்தல், வழியொழுகி வற்புறுத்தல்,
வன்புறையெதிரழிந்திரங்கள், வாய்மைகூறி வருத்தந் தணித்தல், தேறாது புலம்பல், காலமறைத்துரைத்தல்,
தூது வரவுரைத்தல், தூதுகண்டழுங்கல், மெலிவுகண்டுசெவிலிகூறல், கட்டுவைப்பித்தல், கலக்கமுற்றுநிற்றல்,
கட்டுவித்திகூறல், வேலனையழைத்தல், இன்னலெய்தல், வெறிவிலக்குவிக்க நினைத்தல், அறத்தொடு
|