18
வரை பொருட் பிரிதல்
18.1 முலைவிலை கூறல்
முலைவிலை கூறல் என்பது வரைவு முடுக்கப்பட்ட
தலைமகன், யான் வரைவொடு வருதற்கு நீ சென்று அவளையன்மாரை முலைவிலை கேட்பாயாகவென, எல்லாவற்றானு
நின்வரவை எமரேற்றுக்கொளினல்லது விலை கூறுவராயின் அவளுக்கேழுலகும் விலைபோதாதெனத் தோழி முலைவிலை
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
266. குறைவிற்குங் கல்விக்குஞ்
செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
________________________________________________________________
நிற்றலையுரைத்தல், அறத்தொடுநிற்றல்,
ஐயந்தீரக்கூறல், வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல், நற்றாய்க்குச் செவிலி
அறத்தொடுநிற்றல், தேர்வரவுகூறல் மணமுரசுகேட்டுமகிழ்ந்துரைத்தல், ஐயுற்றுக்கலங்கல், நிதிவரவு
கூறாநிற்றல் எனவிவை முப்பத்து மூன்றும் வரைபொருட் பிரிதலாம் எ-று. அவற்றுள்-
18.1. கொலைவேற் கண்ணிக்கு
விலையிலை யென்றது.
இதன் பொருள்: குறைவிற்கும்-வரைவுவேண்டி
நீயெம் மாட்டுக்குறை யுடையையாய் நிற்குமதனானும்; கல்விக்கும் - கல்வி மிகுதியானும்; செல்விற்கும்-செல்வானும்;
நின் குலத்திற்கும் - தங்குலத்திற்கேற்ற நின்குலத்தானும்; வந்தோர் நிறைவிற்கும் - நீ
விடுக்க வந்த சான்றோரது நிறைவானும்; மேதகுநீதிக்கும் - மேவுதற்குத் தகு நீதியானும்; ஏற்பின்
அல்லால் - நின்வரவை யெமரேற்றுக்கொளி னல்லது விலை கூறுவராயின்; நினையின் மெய்ம்மை ஓதுநர்க்கு
- ஆராயுமிடத்து மெய்ம்மை சொல்லு வார்க்கு; உறை வில் குலா நுதலாள் ஏழ்பொழிலும் விலையோ -
விற்போல வளைந்த நுதலை யுடையாட்கு ஏழுலகும் விலையாமோ! விலைக் குறையாம் எ-று.
இறை - எல்லாப் பொருட்கு
மிறைவன்; வில் குலா வரை ஏந்தி-வில்லாகிய வளைதலையுடைய வரையை யேந்துவான்; வண்தில்லையன்-வளவிய
தில்லைக்கண்ணான்; ஏழ்பொழிலும்-அவனுடைய ஏழ்பொழிலுமெனக் கூட்டுக.
|