இ
வரை பொருட் பிரிதல்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.
266
18.2 வருமதுகூறி வரைவுடம்படுத்தல்
வருமது கூறி வரைவுடம்படுத்தல் என்பது
முலைவிலை கூறிய தோழி, நீ வரைவொடு வாராது இரவருள் செய்யாநின்ற விதுகெர்ப்பத்துக்
கேதுவானால் நம்மெல்லார்க்கும் பொல்லாதாம்; அது படாமல் எமராற் றொடுக்கப்பட்ட அருங்கலங்களை
விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்துவாயாகவென மேல் வருமிடுக்கண் கூறித் தலைமகனை வரைவுடம்படுத்தாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
267. வடுத்தன நீள்வகிர்க்
கண்ணிவெண்
ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
________________________________________________
செல்வு-இருமுதுகுரவராற் கொண்டாடப்படுதல்.
நிறைவு-அறிவோடு கூடிய வொழுக்கம். நீதி-உள்ளப்பொருத்த முள்வழி மறாது கொடுத்தல். உறைவிலென்பதற்கு
உறையையுடைய வில்லெனினுமமையும்.
266
18.2. தொடுத்தன விடுத்துத்
தோகைதோளெய்
திடுக்கண்பெரி திரவரினென்றது.
இதன் பொருள்: என்னைத்
தன் தொழும்பிற் படுத்த நல்நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் - என்னைத் தன்னடிமைக்கட்படுவித்த
நல்ல நீண்ட கழலையுடைய வீசரது சிற்றம்பலத்தை; தாம் பணியார்க்கு அடுத்தனதாம் வரின்-தாம்
பணியாதார்க்குத் தக்கனவாகிய தீதுகள் உனக்கு வரக்கூடு மாயின்; இரவின் நின் ஆர் அருள்
பொல்லாது - இரவின் கணுண்டாகிய நின்னாரருள் எமக்குப் பொல்லாது; அதனான், வடுத்தன நீள் வகிர்க்
கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு - வடுவனவாகிய நீண்ட வகிர்போலுங் கண்ணையுடை யாளது தூய முத்துப்
போல மொளியை யுடைய முறுவலுக்கு; தொடுத்தன நீ
|