இவ
அணிந்துரை
இவ்வாறு நயம் பல வயங்க, நலம்
பல புலனாக உரை வழங்கி, அகப்பொருள் திருமுறையாம் திருக்கோவையாரின் சீர்பரவும் பேராசிரியர்
உரையைத் தமிழ் அன்பர்கள் கற்று இன்புறுமாறு, செவ்விதிற் பதிப்பித்து வெளியிடும் தருமை
ஆதீனத்திற்குத் தமிழகம் நன்றி பாராட்டும் கடமை உடையதாகும்.
இத்தமிழ்ப் பணிக்கு ஏதுவாக
அருளாணை வழங்கிய ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளுக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
|