பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
463

மன

வரை பொருட் பிரிதல்

மன்றங் கிடைமரு தேகம்பம்
        வாஞ்சியம் அன்னபொன்னைச்
    சென்றங் கிடைகொண்டு வாடா
        வகைசெப்பு தேமொழியே.

268

________________________________________________________________

யுடைய சுரத்தையுங் கடந்துபோய், உமர் கூறும் நிதி கொணர்ந்து-நுமர்சொல்லு நிதியத்தைத் தேடிக்கொணர்ந்து; நும்மையும் வந்து மேவுவன்-நும்மையும் வந்து மேவுவேன்; தேமொழியே - தேமொழியினையுடையாய்; சென்று-நீ சென்று; அம்பலம் சேர் மன்தங்கு - அம்பலத்தைச் சேர்ந்த மன்னன்றங்கும்; இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை-இடைமருது ஏகம்பம் வாஞ்சியமாகிய இவற்றை யொக்கும் பொன்னை; இடை கொண்டு வாடாவகை - இடைகொண்டு வாடாத வண்ணம்; அங்குச் செப்பு-அவ்விடத்துச் சொல்ல வேண்டுவன சொல்லுவாயாக எ-று.

   
குன்றக்கிடையென்பது மெலிந்து நின்றதெனினுமமையும். நும்வயி னென்பதூஉம் பாடம். எண்ணப்பட்டவற்றோடு படாது அம்பலஞ் சேர் மன்னனெனக் கறியவதனால், அம்பலமே யவர்க்கிட மாதல் கூறினார். இடைகொண் டென்புழி இடை காலம். மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைபொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல்.

268