18
வரை பொருட் பிரிதல்
18.4 நீயே கூறென்றல்
நீயே கூறென்றல் என்பது பிரிவறிவிப்பக்
கூறின தலைமகனுக்கு, நீ யிரவுவரினும் பகற்பிரிந்து செல்வையென வுட்கொண்டு நின்னொடு கூடிய வப்பொழுதும்
யானுயிர்வாழேனென்று நினைந்திருப்பாளுக்குத் தாழேனென்னு முரைமுன்னாக நின்பிரிவை நீயே
சொல்லிப் போவாயாகவென அவன் விரையவருவது காரணமாகத் தோழி தலைமகளது பிரிவாற்றாமை கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
269. கேழே வரையுமில்
லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
______________________________________________________________
18.4. காய்கதிர்வேலோய்
கனங்குழையவட்கு
நீயேயுரை நின்செலவென்றது.
இதன் பொருள்: தனி
வள்ளலே - ஒப்பில்லாத வள்ளலே; கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர்ப் பயில் கிள்ளை அன்ன
யாழ் ஏர் மொழியாள் - தனக்குவமையாக யாவரையுமுடையனல்லாதவனது புலியூர்க்கட்பயிலுங் கிளியையொக்கும்
யாழோசைபோலு மொழியையுடையாள்; இரவரினும் பகல் சேறி என்று - இரவினீவரினும் பகற்பிரிந்து செல்வையென்று
அதனையே யுட்கொண்டு; வாழேன் என இருக்கும் வரிக் கண்ணியை - நின்னோடுகூடிய வப்பொழுதும் யானுயிர்வாழேனென்று
நினைந்திருக்கும் வரிக்கண்ணினை யுடையாளை; வருட்டி இடைக்கண் தாழேன் என நீ சொல்லி ஏகு-வசமாக்கிப்
பெற்றதோர் செவ்வியில் தாழேனென்னும் உரை முன்னாக நின்பிரிவை நீயே சொல்லியேகுவாயாக எ-று.
கிளி மென்மையும் மென்மொழியுடைமையும்பற்றி,
மென் மொழியையுடையாட் குவமையாய் வந்தது. யாழோசை செவிக் கினிதாதல் பற்றி மொழிக்குவமையாய்
வந்தது. புலியூர்ப் பயிலுமொழியாளெனவியையும். வாழேனென விருக்கு மென்ப தனை முற்றாக்கி
மொழியாளிவ்வாறு செய்யும். அவ்வரிக் கண்ணியை யென ஒரு சுட்டு வருவித்துரைப்பினுமமையும். வருடி
வருட்டியென மிக்கு நின்றது. வாழேனெனவிருக்கு மென்றதனான், இத்தன்மைத்தாகிய விவளது
பிரிவாற்றாமையை மறவாதொழிய
|