பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
465

வரை பொருட் பிரிதல்

    வாழே னெனவிருக் கும்வரிக்
        கண்ணியை நீ வருட்டித்
    தாழே னெனவிடைக் கட்சொல்லி
        யேகு தனிவள்ளலே.

269

18.5 சொல்லாதேகல்

   
சொல்லாதேகல் என்பது நீயேகூறென்ற தோழிக்கு, யானெவ்வாறு கூறினும் அவள் பிரிவுடம்படாளாதலின் ஒருகாலும் வரைந்து கொள்கையில்லை; யான் விரைய வருவேன்; அவ்வளவும் நீயாற்றுவித்துக் கொண்டிருப்பாயாகவெனக் கூறித் தலைமகன் றலைமகளுக்குச் சொல்லாது பிரியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

270. வருட்டின் திகைக்கும் வசிக்கின்
        துளங்கும் மனமகிழ்ந்து
    தெருட்டின் தெளியலள் செப்பும்
        வகையில்லை சீரருக்கன்

______________________________________________________________

வேண்டு மென்றாளாம். இடைக்கணென்றது இவ்வொழுக்கத்தால் நினக்கு வருமேத நினைந்து ஆற்றாளாஞ் செவ்விபெற்றென்றவாறு. வடிக்கண்ணியை யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகள தாற்றாமை யுணர்த்துதல்.

269

18.5.  நிரைவளை வாட
     உரையா தகன்றது.

   
இதன் பொருள்: வருட்டின் திகைக்கும் - நுதலுந் தோளு முதலாயினவற்றைத் தைவந்து ஒன்று சொல்லக் குறிப்பேனாயின் இஃதென் கருதிச் செய்கின்றானென்று மயங்காநிற்கும்; வசிக்கின் துளங்கும்-இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்; தெருட்டின் மன மகிழ்ந்து தெளியலள்-இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருண்முடித்துக் கடிதின் வருவலென்று சூளுற்றுத் தெளிவிப்பேனாயின் மன மகிழ்ந்து அதனைத் தேறாள்; செப்பும் வகை இல்லை - இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் - சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ்வண்ணஞ் சொல்லிப் போவேன்!  ஒருவாற்றானுமரிது எ-று.