New Page 1
வரை பொருட் பிரிதல்
குருட்டிற் புகச்செற்ற
கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.
270
18.6 பிரிந்தமை கூறல்
பிரிந்தமை கூறல் என்பது தலைமகன்,
முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமையிற் சொல்லாது பிரியாநிற்ப, தோழி சென்று, நமராற்
றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கு வரவிட்டு நின்னை வரைந்துகொள்வானாக அழற்கட நெறியே
பொருள் தேடப் போனான்; அப்போக்கு, அழற்கடஞ் சென்றமையான் நமக்குத் துன்பமென்பேனோ?
வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின் நமக்கின்பமென்பேனோவெனப் பொதுப் படக் கூறி, வரைவு காரணமாகப்
பிரிந்தானாதலின், இது நமக்கின்பமே யெனத் தலைமகள் வருந்தாமல் அவன் பிரிந்தமை கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
271. நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
__________________________________________________
சீர் அருக்கன் குருட்டின் புகச் செற்ற
கோன் புலியூர்-பெருமையையுடைய அருக்கன் குருடாகிய இழிபிறப்பிற் புகும்வண்ணம் அவனை வெகுண்ட
தலைவனது புலியூரை; குறுகார் மனம் போன்று இருட்டின் புரிகுழல்-அணுகாதார் மனம் போன்று இருட்டுதலையுடைய
புரிகுழலெனக் கூட்டுக.
வருடினென்பது வருட்டினென நின்றது. ஏகுவதே
யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு மாட்சிமைப் படுத்துதற்குப் பிரிதல். 270
18.6. தேங்கமழ் குழலிக்குப்
பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: நம்
சிறந்தவர் - நமக்குச் சிறந்த அவர்; நமர் தொடுத்த எல்லா நிதியும் உடன் விடுப்பான் - நமராற்
றொடுக்கப்பட்ட
|