18
வரை பொருட் பிரிதல்
18.25 அறத்தொடு நிற்றல்
அறத்தொடு நிற்றல் என்பது அறத்தொடு
நிற்பாளாக முன்றோற்றுவாய் செய்து, எம்பெருமாற்குப் பழி வருங்கொல்லோவென்னுமையத்தோடு நின்று,
யாமுன்பொருநாள் கடற்கரையிடத்தே வண்டல்செய்து விளையாடாநின்றே மாக அந்நேரத்தொருதோன்றல்,
நும் வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யச் சிறிது புடைபெயர்ந்தாய்;
அந்நிலைமைக்கட் கீழ்காற்று மிகுதலாற் கரைமேலேறுங்கடல் மேல் வந்துற்றது; உற, யான்
றோழியோ தோழியோ வென்று நின்னை விளித்தேன்; அதுகண்டிரங்கி, அவனருளொடுவந்து தன் கையைத்
தந்தான்; யானு மயக்கத்தாலே யதனை நின்கையென்று தொட்டேன்; அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது,
என்னுயிர் கொண்டுதந்து, என்னைக் கரைக்கணுய்த்துப் போயினான்; அன்று என்னாணினால் நினக்கதனைச்
சொல்லமாட்டிற்றிலேன்; இன்றிவ்வாறாயினபின் இது கூறினேன்; இனி நினக்கடுப்பது செய்வாயாகவெனத்
தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள்-
290. வண்டலுற் றேமெங்கண்
வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
____________________________________________________________
18.25. செய்த வெறியி னெய்துவ
தறியாது
நிறத்தொடித் தோழிக் கறத்தொடு
நின்றது.
இதன் பொருள்: வண்டல்
உற்றேம் எங்கண் - விளையாட்டைப் பொருந்தினேமாகிய வெம்மிடத்து; ஒரு தோன்றல் - ஒருதோன்றல்;
வரி வளையீர் உண்டல் உற்றேம் என்று வந்து நின்றது ஓர் போழ்து -வரிவளையை யுடையீர் நும்வண்டல்
மனைக்கு விருந்தாய் நாமுண்ணக் கருதினோமென்று சொல்லிவந்து நின்றதோர் பொழுதின்கண்; உடையான்
புலியூர்க் கொண்டல் உற்று ஏறும் கடல் வர - உடையானது புலியூர்வரைப்பிற் கீழ்காற்று மிகுதலாற்
கரை மேலேவந்தேறுங் கடல் எம்மேல்வர; எம் உயிர் கொண்டு தந்து - அதன்கணழுந்தாமல் எம்முயிரைக்
கைக்கொண்டு எமக்குத்தந்து; ஓர் கழலவன் கண்டல் உற்று ஏர் நின்ற சேரிச் சென்றான் - அவ்வொரு
|