பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
491

New Page 1

வரை பொருட் பிரிதல்

கொண்டலுற் றேறுங் கடல்வர
        எம்முயிர் கொண்டுதந்து
    கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
        றானொர் கழலவனே.

290

18.26 ஐயந்தீரக்கூறல்

   
ஐயந்தீரக்கூறல் என்பது எம்பெருமாற்குப் பழிவருங் கொல்லோவென் றையுற்று அறத்தொடு நின்ற தலைமகளது குறிப்பறிந்த தோழி, அவளையந்தீர, நங்குடிக்குப் பழிவரினும், அவற்குப் பழிவாராமல் மறைத்துக்கூறுமா றென்னோவெனத் தான் றலைமகளைப் பாதுகாத்தல் தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

291. குடிக்கலர் கூறினுங் கூறா
        வியன்தில்லைக் கூத்தனதாள்
    முடிக்கல ராக்குமொய் பூந்துறை
        வற்கு முரிபுருவ

________________________________________________________________

கழலவன் கண்டலாகிய மரமிக்கு அழகுநின்ற அச்சேரியின்கட் சென்றான்; இனித் தக்கது செய்வாயாக எ-று.

    வண்டலுற்றேமங்கணென்பது பாடமாயின், அங்க ணென்பதனை ஏழாம் வேற்றுமைப் பொருள்பட நின்றதோ ரிடைச்சொல்லாக வுரைக்க. புலியூர்க் கடலென வியையும். தேரிற் சென்றானென்பது பாடமாயின், நம்மைக் காண்டல் விரும்பித் தேர்மேலேறிச் சென்றானென்றுரைக்க. தேரினென்பது கருவிப் பொருட்கண் வந்த வைந்தாமுருபெனினு மமையும். இதற்குக் காண்டலுற்றென்பது குறுகி நின்றது. தோன்றல் கழலவன் என்றதனால், அவனது பெருமையும், எம்முயிர் கொண்டு தந்தென்றதனால் மெய்யுறவுங் கூறினாளாம். மெய்ப்பாடும் பயனும் அவை.

290

18.26.  விலங்குதல் விரும்பு மேதகு தோழி
      அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது.


   
இதன் பொருள்: முரி புருவ வடிக்கு அலர் வேல் கண்ணி - முரிந்த புருவத்தை யுடைய வடுவகிரிற் பரந்த வேல்போலுங் கண்ணையுடையாய்; கூறா வியன் தில்லைக் கூத்தன தாள் - கூறலாகாத அகன்ற