வ
வரை பொருட் பிரிதல்
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.
291
_______________________________________________________________
தில்லையிற் கூத்தனுடைய தாள்களை;
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூந் துறைவற்கு வந்தன - தன்முடிக்குப் பூவாக்கும் மொய்த்த பூவையுடைய
துறையை யுடையவனுக்கு வந்த பழிகளை; சென்று நம் யாய் அறியும்-அவைபோய்ப் பரத்தலான் நம்முடைய
யாயுமறியும்; படிக்கு அலர் ஆம்-அதுவேயு மன்றி, உலகத்திற் கெல்லா மலராம்; அதனான், குடிக்கு
அலர் கூறினும்-நங்குடிக் கலர் கூறினேமாயினும்; இவை நாம் மறைக்கும் பரிசுகள் என்-இவற்றை நாம்
மறைத்துச் சொல்லும் பரிசுகளென்னோ! எ-று.
கூறாத்தாளெனவியையும்.
வடுவகிரோடு பிறபண்பாலொக்கு மாயினும், பெருமையானொவ்வாதென்னுங் கருத்தான், வடிக்கலர் கண்ணென்றாள்.
வடிக்கென்னு நான்காவது ஐந்தாவதன் பொருட் கண் வந்தது. வடித்தலான் விளங்கும் வேலெனினுமமையும்.
அறத்தொடு நிற்குமிடத்து எம்பெருமாற்குப் பழிபடக் கூறுமோ வென்றையுறுந் தலைமகட்கு, நங்குடிக்கலர்
கூறினுந் துறைவற்குப் பழிபடக் கூறே னென்பதுபடக் கூறித்தோழியறத்தொடு நிற்றலை யுடம்படுவித்த
வாறு. கூறாவென்பதற்குக் கூத்தனதாள் தனக்குக் கூறாகவென்றும், யாயறியும்படிக்கலராமென்பதற்கு யாயுமறியும்
படியாகச் சென்றலரா மென்று முரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
291
|