கத
வரை பொருட் பிரிதல்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.
292
18.28 செவிலிக்குத்
தோழி யறத்தொடுநிற்றல்
செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல்
என்பது வெறிவிலக்கி நிற்ப, நீ வெறிவிலக்குதற்குக் காரணமென்னோவென்று கேட்ட செவிலிக்கு, நீ
போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த்தினைக்கிளி கடியாநின்றோம்; அவ்விடத்தொரு
யானைவந்து நின்மகளை யேதஞ்செய்யப் புக்கது; அதுகண்டு அருளுடையானொருவன் ஓடி வந்தணைத்துப் பிறிதொன்றும்
சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளதுயிர்கொடுத்துப் போயினான்; அறியாப்பருவத்து நிகழ்ந்ததனை
இன்றறியும் பருவமாதலான். “உற்றார்க்கு குரியர் பொற்றொடி மகளிர்” என்பதனை யுட்கொண்டு, இவ்வாறுண்
மெலியாநின்றாள்; இனியடுப்பது செய்வாயாகவெனத் தோழி அறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-
293. மனக்களி யாய்இன்
றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
______________________________________________________________
எடுத்தற் பொருட்டு அவன்றோள் வந்து
நிற்க வென்று பொருளுரைத்து, அவ்வெச்சத்திற்கு முடிபாக்கினுமமையும். மதியுடையாரில்லைகொல் லென்பது
குறிப்பு நிலை, அறத்தொடு நின்ற திறத்தினில் - அறத்தொடு நின்ற தன்மைத்தாக. பிறிது -
புனலிடையவன் வந்துதவினவுதவி. மெய்ப்பாடு: பெருமிதத்தைச் சார்ந்த நகை பயன்: குறிப்பினால் வெறிவிலக்குதல்.
292
18.28. சிறப்புடைச் செவிலிக்
கறத்தொடு நின்றது.
இதன் பொருள்: மனக்
களியாய் இன்று யான் மகிழ் தூங்க-உள்ளக்களிப்புண்டாய் இன்றியான் மகிழ்தூங்கும் வண்ணம்; தன்
|