ச
வரை பொருட் பிரிதல்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.
293
________________________________________________________________
வார்கழல்கள் எனக்கு அளியாநிற்கும்
அம்பலத்தோன் இருந்தண்கயிலை-எனக்குத் தன்னுடைய நீண்டகழலையுடைய திருவடிகளை யளியாநிற்கும் அம்பலத்தானது
பெரிதாகிய குளிர்ந்த கயிலைக்கண்; புனச் செவ் வாய்ப் பசிய கிளி யாம் கடியும் வரைச் சாரல்
பொருப்பிடத்து - எம்புனத்தின்கண் வருஞ் செவ்வாயை யுடைய பசியகிளிகளை யாங்கடியும் வரையடியினுண்டாகிய
பொருப் பிடத்தின்கண்வந்து; ஒருவர் - ஒருவர்; சினக்களி யானை கடிந்தார் - எம்மேல்வருஞ் சினத்தையுடைய
களியானையை மாற்றிளார்; இனியடுப்பது செய்வாயாக எ-று.
கயிலையென்றது கயிலையையணைந்த
விடத்தை; கடியும் பொருப்பென வியையும். வரை - உயர்ந்தவரை. பொருப்பு - பக்கமலை, கிளிகடியும்
பருவமென்ற தனாற் கற்பினோடு மாறு கொள்ளாமை முதலாயின கூறினாளாம். மெய்ப்பாடு: அது. பயன்:
வெளிப்படையாலறத்தொடு நிற்றல்.
293
|