18
வரை பொருட் பிரிதல்
18.29 நற்றாய்க்குச் செவிலி
யறத்தொடு நிற்றல்
நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு
நிற்றல் என்பது தோழி யறத்தொடு நிற்பக்கேட்ட செவிலி, இளையளாகிய இல்வாழ்க்கைச் செல்வத்தையுடைய
விவளை என்சொல்லிப் புகழுவோம்? முன்னெழுமிரண்டெயிறு முளையாத விளமைப்பருவத்தே அறிவு முதிர்ந்தாளெனத்
தலைமகளது கற்புமிகுதி தோன்ற நற்றாய்க் கறத்தொடு நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-
294. இளையா ளிவளையென்
சொல்லிப்
பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.
294
______________________________________________________________
18.29. கற்பினின் வழாமை நிற்பித்
தெடுத்தோள்
குலக்கொடி தாயர்க் கறத்தொடு
நின்றது.
இதன் பொருள்: இமையோர்
முடி சாய்த்து - இமையோர் தம்முடியைச் சாய்த்து; வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன்
- வணங்கியும் வாழ்த்தியும் வருந் திருச்சிற்றம்பலத்தின்கண் உளனாகிய மன்னனது; திளையாவரும்
அருவிக்கயிலைப் பயில் செல்வியை - திளைத்துவரு மருவியையுடைய கயிலைக்கட் பயிலுந் திருவாட்டியை;
இளையாள் இவளை-இளையாளாகிய விவளை; என் சொல்லிப் பரவுதும் - என்சொல்லிப் புகழ்வோம்; ஈர்
எயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள்-முன்னெழு மிரண்டெயிறு முளையாத விளமைக்கண் அறிவுமுதிர்ந்தாள்
எ-று.
திளைத்தல் ஈண்டிடைவிடாது
அவ்விடத்தோடு பயிறல். கற்பினின்வழாமை நிற்பித் தெடுத்தோள்-கற்பினின் வழுவாமலறிவு கொளுத்தி
வளர்த்தவள். மெய்ப்பாடு: உவமை. பயன்: நற்றாய்க்கறத்தொடு நிற்றல்.
294
|