பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
498

18

வரை பொருட் பிரிதல்

18.31 மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல்

   
மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் என்பது தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார், இஃதிவளை நோக்கி யொலியாநின்றது மணமுரசென வுட்கொண்டு யாம் பூரண பொற்குடந் தோரண முதலாயினவற்றான் மனையை யலங்கரிப்போமென மகிழ்வொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

296. பூரண பொற்குடம் வைக்க
        மணிமுத்தம் பொன்பொதிந்த
    தோரணம் நீடுக தூரியம்
        ஆர்க்கதொன் மாலயற்குங்

_____________________________________________________________

தலைமகன் பிரிந்தகாலத்துத் தலைமகளதாற்றாமையைத் தாமாற்றுவிக்க மாட்டாது பொறுத்துக் கண்டிருந்த புள்ளினமுங்கடலும் அவனது தேர்வரவுகண்டு, இனிப்பிரிவும் பிரிவாற்றாமையுமில்லையென்று மகிழ்வுற்றார்த்தனவென்றறிக. அணிதினின் வரும் - அணித்தாகவரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்; வரைவுமலிந்தமை யுணர்த்தலுமாம்.

295

18.31.  நிலங்காவலர் நீண்மணத்தின்
      நலங்கண்டவர் நயந்துரைத்தது.

   
இதன் பொருள்: தொல் மால் அயற்குங் காரணன்-பழையராகிய அரியயனுக்குங் காரணனாயுள்ளான்; ஏர் அணி கண் நுதலோன்-அழகுண்டாகிய கண்ணையுடைய நுதலையுடையான்; கடல் தில்லை அன்ன-அவனது கடலையடைந்த தில்லையை யொக்கும்; வார் அணவும் முலை மன்றல் என்று மணமுரசு ஏங்கும்-வாராற்கட்டப்படுமளவைச் சென்றணவும் முலையையுடையாளது மணமென்று மணமுர சேங்காநின்றது. அதனால், பூரண பொற் குடம் வைக்க-வாயில்கடோறும் நீரானிறைக்கப்பட்ட பொற்குடத்தை வைக்க; மணி முத்தம் பொன் பொதிந்த தோரணம் நீடுக-மணியு முத்தும் பொன்னின்கணழுத்திய தோரணம் எங்குமோங்குவதாக; தூரியம் ஆர்க்க - தூரியங்கணின் றார்ப்பனவாக எ-று.

   
வாரணவுமுலை யென்பதற்கு வாரைப்பொருந்து முலை