பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
499

வரை பொருட் பிரிதல்

காரணன் ஏரணி கண்ணுத
        லோன்கடல் தில்லையன்ன
    வாரண வும்முலை மன்றலென்
        றேங்கும் மணமுரசே.

296

18.32. ஐயுற்றுக்கலங்கல்

   
ஐயுற்றுக் கலங்கல் என்பது மணமுரசு கேட்டவள் மகிழ்வொடு நின்று மனையை யலங்கரியா நிற்ப, மிகவுங் களிப்பை யுடைத்தாய நமது சிறந்த நகரின்கண் முழங்காநின்ற இப்பெரிய முரசம், யான் எவற்கோ அறிகின்றிலேனெனத் தலைமகள் கலக்க முற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

297. அடற்களி யாவர்க்கு மன்பர்க்
        களிப்பவன் துன்பவின்பம்
    படக்களி யாவண் டறைபொழிற்
        றில்லைப் பரமன்வெற்பிற்

______________________________________________________________

யெனினுமமையும். மெய்ப் பாடு: உவகை. பயன்: நகரியலங்கரித்தல். 296

18.32.  நல்லவர்முரசுமற் றல்லவர்முரசெனத்
      தெரிவரிதென அரிவைகலங்கியது.


   
இதன் பொருள்: விடக் களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசு - மிகவுங் களிப்புண்டாய நமது சிறந்த வில்லின்கண் முழங்காநின்ற இப்பெரியமுரசம்; வெற்பின் கடக் களியானை கடிந்தவர்க்கோ - வெற்பின்கண் மதத்தையுடைய களியானையை நம்மேல் வராமல் மாற்றினவர்க்கோ; அன்றி நின்றவர்க்கோ - அன்றியாது மியைபில்லாதவர்க்கோ? அறிகின்றிலேன் எ-று.

   
துன்ப இன்பம் பட அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன்-பிறவியான் வருந் துன்பமுமின்பமுங் கெட இயல்பாகிய பேரின்பத்தை யாவராயினு மன்பராயினார்க்கு வரையாது கொடுப்போன்; களியா வண்டு அறை பொழில் தில்லைப் பரமன் - களித்து வண்டுக ளொலிக்கும் பொழிலையுடைய தில்லைக்கணுளனாகிய பரமன்; வெற்பின் - அவனது வெற்பினெனக் கூட்டுக.