பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
501

New Page 1

வரை பொருட் பிரிதல்

    கொன்கடைக் கண்தரும் யானை
        கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
    முன்கடைக் கண்ணிது காண்வந்து
        தோன்றும் முழுநிதியே.

298

___________________________________________________

தோன்றும் முழுநிதி - நங்கடைமுன் வந்து தோன்றும் குறைவில்லாத நிதி; இது காண் - இதனைக்காண்பாயாக எ-று.

என்கடைக்கண்ணினு மென்பதற்கு மொழிமாற்றாது எனது கடையாகிய நிலைமைக்கண்ணுமென் றுரைப்பினுமமையும். கண்ணகன்ஞாலமென்புழிப் போலக் கண்ணென்பது ஈண்டுப் பெயராகலின் ஏழனுருபு விரித்துரைக்க. கடைக்கண்ணினு மென்னும் வேற்றுமைச்சொல்லும், ஏத்தாவகையென்னும் வினையெச்சமுங் கடைக்கண் வைத்த வென்னும் வினைகொண்டன. கடைக்கணென்பதனை முடிவாக்கி, என் முடிவுகாலத்தும் பிறவேத்தா வகையென்றுரைப்பாருமுளர். கொன்கடைக் கண்டரும்யானை யென்பதற்கு, அச்சத்தைக் கடைக்கண்டரும் யானையென்றுரைப்பாரு முளர். வண்புகழ்-அறத்தொடுநின்று கற்புக்காத்தலான் வந்த புகழ். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஐயந்தீர்தல்.

298

வரைபொருட்பிரிதல் முற்றிற்று.