19
19. மணஞ்சிறப்புரைத்தல்
மணஞ்சிறப்புரைத்தல் என்பது வரைந்த
பின்னர் மணஞ் சிறப்புக் கூறாநிற்றல். அதுவருமாறு-
மணமுரசு கூறன் மகிழ்ந்துரைத் தல்லொடு
வழிபாடு கூறல் வாழ்க்கைநலங் கூறல்
காதல்கட் டுரைத்தல் கற்பறி வித்தல்
கற்புப்பயப் புரைத்தல் காதன்மரு
வுரைத்தல்
கலவி யுரைத்தல் கருதிய
வொன்பதும்
நலமிகு மணமிவை நாடுங் காலே.
19.1 மணமுரசு கூறல்
மணமுரசு கூறல் என்பது வரைபொருட்
பிரிந்துவந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு முன்றிற்கணின்று தலைமகனது முரசு முழங்காநிற்பக்
கண்டு மகிழ்வுறாநின்ற தோழி, நாந்துயர் தீர நம்மில்லின்கட் புகுந்து நின்று யானைகடிந்தார்
முரசு முழங்காநின்றது; இனி யென்ன குறையுடையோ மென வரைவு தோன்ற நின்று, தலைமகளுக்கு மணமுரசு கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
299. பிரசந் திகழும்
வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
________________________________________________
மணஞ்சிறப்புரைத்தல் - இதன்
பொருள்: மணமுரசுகூறல், மகிழ்ந்துரைத்தல், வழிபாடுகூறல், வாழ்க்கைநலங்கூறல், காதல்கட்டுரைத்தல்,
கற்பறிவித்தல், கற்புப்பயப்புரைத்தல், மருவுதலுரைத்தல், கலவியின் பங்கூறல் என விவை ஒன்பதும்
மணஞ்சிறப்புரைத்தலாம். எ-று. அவற்றுள்-
19.1. வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி
நிரைவளைக்கு நின்றுரைத்தது.
இதன் பொருள்: சந்த புரை
மேகலையாய் - நிறத்தையுடைய
|