அரசம
மணஞ் சிறப்புரைத்தல்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே.
299
19.2 மகிழ்ந்துரைத்தல்
மகிழ்ந்துரைத்தல் என்பது மணமுரசொலி
கேட்ட தோழி, சிலம்பன்றந்த பெறுதற்கரிய தழைகளை வாடாமல்வைத்து அத்தழையே பற்றுக்கோடாக
ஆற்றியிருந்தாளெனத் தலைமகளைத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
300. இருந்துதி யென்வயிற்
கொண்டவன்
யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
__________________________________________________________
வுயர்ந்த மேகலையையுடையாய்; எவர்க்கும்
முன்னாம் அரசு - அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்குமரசு; அம்பலத்து நின்று ஆடும்
பிரான் - இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின்கண் எல்லாருங்காண நின்றாடுமுதல்வன்;
அருள் பெற்றவரின் துயர் தீர-அவனதருளுடையவரைப்போல நாந்துயர்தீர; புகுந்து நின்று - நம்மில்லின்கட்
புகுந்துநின்று; பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும்-பெருந்தேன்
றிகழு மலை போலும் யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்காநின்றது;
முருகியம் நீங்கும் - அதுவேயுமன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன
குறையுடையோம்? எ-று.
புகுந்துநின்று திகழுமெனக் கூட்டுக.
வரையுயர்யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று பாடமோதி, கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை
நாறாநின்றனவென் றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.
299
19.2. மன்னிய கடியிற் பொன்னறுங்
கோதையை
நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.
இதன் பொருள்: சிலம்பன்
அரும் தழை-சிலம்பன்றந்த
|