பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
504

மணஞ் சிறப்புரைத்தல்

    இருந்து திவண்டன வாலெரி
        முன்வலஞ் செய்திடப்பால்
    அருந்துதி காணு மளவுஞ்
        சிலம்பன் அருந்தழையே

300

______________________________________________________________

பெறுதற்கரிய தழைகள்; முன் எரி வலம் செய்து - இப்பொழுது முன்றீயை வலங்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும் - பின் வசிட்டனிடப்பக்கத்துத் தோன்றும் அருந்ததியைக் காணும் அளவும்; தில்லை வாழ்த்தினர் போல் இருந்து திவண்டன - தில்லையை வாழ்த்தினரைப்போல வாடாதிருந்து விளங்கின எ-று.

    இருந்துதி என் வயின் கொண்டவன் - அன்பர் துதிப்ப அவர் வயிற் றான்கொள்ளும் பெருந்துதியை என்வயினுண்டாக்கிக் கொண்டவன்; யான் எப்பொழுதும் உன்னும் மருந்து - யானெப் பொழுது முன்னும் வண்ணஞ் சுவையுடைத்தாயதோர் மருந்து; திசைமுகன் மாற்கு அரியோன்-இவ்வாறெனக்கெளியனாயினுந் திசை முகற்கும் மாற்கு மரியான்; தில்லை-அவனது தில்லையெனக் கூட்டுக.

   
என்றது தழைகளை வாடாமல் வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலைமகளை மகிழ்ந்து கூறியவாறு, திவண்டன வென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டியின்புறுத்தின வென்றுரைப்பினுமமையும். தழை வாடா திருந்தனவென்றது முன்னர்த் தான் அவன்றந்த தழையையேற்ற முகூர்த்தத்தைக் கொண்டாடியவாறு. மெய்ப்பாடு: உவகை பயன்: மகிழ்தல். வேயினமென்றோள் (பா. 282) என்னுமதுதொட்டு இதுகாறும் வர இப்பாட்டுப் பத்தொன்பதும் அறத்தொடு நிலையினையும், அதன் பின்னர் வரைதலையும் நுதலினவென்பது. அகத்தினையின் மிகத் திகழும் இன்பக் கலவி இன்பக் களவு முற்றிற்று. எண்பத்தொராம் பாட்டு முதல் இப்பாட்டீறாகத் தோழி யாலாய கூட்டம்.

300