பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
505

19

மணஞ் சிறப்புரைத்தல்

19.3 வழிபாடு கூறல்

   
வழிபாடுகூறல் என்பது மணஞ்செய்த பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்புமுயிரும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாமையால் இவள் கருத்தைக் கடவார்; கமலங் கலந்த தேனுஞ் சந்தனமரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய் இவள் வழியே நின்றொழுகா நின்றாரெனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகா நின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

301. சீரியல் ஆவியும் யாக்கையும்
        என்னச் சிறந்தமையாற்
    காரியல் வாட்கண்ணி எண்ணக
        லார்கம லங்கலந்த

_____________________________________________________________

19.3.  மணமனை காண வந்தசெவி லிக்குத்
     துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.


   
இதன் பொருள்: அன்னே - அன்னாய்; கார் இயல் கண்டர் வண்தில்லை வணங்கும் எம் காவலர் - கார்போலுங் கண்டத்தையுடையவரது வளவிய தில்லையைவணங்கு மெம்முடைய காவலர்; சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால் - சீர்மையியலு முயிருமுடம்பும்போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால்; கார் இயல் வாள் கண்ணி எண் அகலார் - கரியவியல்பை யுடைய வாள் போலுங் கண்ணையுடையாளது கருத்தைக்கடவார்; கமலம் கலந்த வேரியும் சந்தும் வியல் தந்தென -தாமரைப் பூவைச் சேர்ந்த தேனுஞ் சந்தனமரமும் இடத்துநிகழ் பொருளுமிடமுமாய் இயைந்து தம்பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்பர்-இவளது வழிபாட்டின் கண்ணே நிற்பர் எ-று.

   
எண்ணகலா ரென்றதனாற் காதலியாதலும், கற்பினிற்ப ரென்றதனால் வாழ்க்கைத்துணையாதலுங் கூறப்பட்டன. ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும், யாக்கையுஞ் சந்தும் தலைமகற்குவமையாகவுமுரைக்க. பிரித்துவமையாக்காது, இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டமுவமையாக வுரைப்பினுமமையும், காரியல் கண்டர்வண்டில்லை வணங்கு மென்றதனான்,