New Page 1
மணஞ் சிறப்புரைத்தல்
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.
301
19.4 வாழ்க்கைநலங் கூறல்
வாழ்க்கை நலங்கூறல் என்பது
மணமனை கண்ட செவிலி, மகிழ்வோடு சென்று, நின்மகளுடைய இல்வாழ்க்கை நலத்திற்கு உவமைகூறில்,
நின்னுடைய இல்வாழ்க்கை நலமல்லது வேறுவமை யில்லையென நற்றாய்க்குத் தலைமகளது வாழ்க்கைநலங்
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
302. தொண்டின மேவுஞ்
சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
______________________________________________________________
இவரதில்வாழ்க்கை இன்றுபோல என்றும்
நிகழு மென்பது கூறினாளாம். இன்னேயென்பது பாடமாயின், இப்பொழுதே யென்றுரைக்க. மெய்ப்பாடு:
உவகை. பயன்: மகிழ்வித்தல்.
301
19.4. மணமனைச் சென்று மகிழ்தரு
செவிலி
அணிமனைக் கிழத்திக் கதன்சிறப்
புரைத்தது.
இதன் பொருள்: தொண்டினம்
மேவும் சுடர்க் கழலோன் தில்லைத் தொல் நகரில் - தொண்டர தினத்தைப் பொருந்துஞ் சுடர்க்கழலை
யுடையவனது தில்லையாகிய பழையநகரிடத்தில்; கண்ட இல் மேவு நம் இல் - யான்கண்ட அவளதில்லம்
மேவப்படு நமதில்லத் தோடொக்கும்; அவள் நீ - அவள் நின்னோடொக்கும்; தண்டு இனம் மேவும்
செழு மெல் திண் தோளவன் நின் கொழுநன் - தண்டாகிய வினத்தையொக்கும் வளவியவாய் மெல்லியவாகிய
திண்ணிய தோள்களையுடையான் நின்கொழுநனோ டொக்கும்; அவள் தற்பணிவோள் யான் - அவடன்னைப்பணிந்து
குற்றேவல் செய்வாள் என்னோடொக்கும்; வண்டினம் மேவும் குழலாள் அயல் இவ்வயல்- வண்டினம்
பொருந்துங் குழலையுடையாளதயல் இவ்வயலோடொக்கும்; வேறுசொல்லலாவதில்லை எ-று.
|