பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
507

தண

மணஞ் சிறப்புரைத்தல்

 தண்டின மேவுதிண் தோளவன்
        யானவள் தற்பணிவோள்
    வண்டினமேவுங் குழலா
        ளயல்மன்னும் இவ்வயலே.

302

19.5 காதல் கட்டுரைத்தல்

   
காதல் கட்டுரைத்தல் என்பது அவளில்வாழ்க்கை நலங்கிடக்க, அவன் அவண்மேல்வைத்த காதலான் இவையேயன்றிப் பொறையாமென்று கருதி நுதலின்கண் இன்றியமையாத காப்பாகிய பொட்டையு மணியான்; இஃதவன் காதலெனத் தலைமகனது காதன்மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

303. பொட்டணி யான்நுதல் போயிறும்
        பொய்போ லிடையெனப்பூண்
    இட்டணி யான்தவி சின்மல
        ரன்றி மிதிப்பக்கொடான்

________________________________________________

கண்டவென்பது கடைக்குறைந்து நின்றது. பெண்டீர்க்கு ஊறினி தாதனோக்கித் தோளிற்கு மென்மைகூறினாள். தண்டின மென்புழி இனமென்றது சாதியை. மன்னும்: அசைநிலை, பெரும் பான்மையுமென்பதுபட நின்றதெனினுமமையும். கண்டென்பதனைத் தன்மைவினை யென்று, அவளில்வாழ்க்கையேர் கண்டேனென முன்பொதுவகையாற் கூறிப் பின் சிறப்புவகையாற்  கூறிற்றாக வுரைப்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை.

302

19.5.  சோதி வேலவன்
     காதல்கட் டுரைத்தது.

   
இதன் பொருள்: கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலன்-மகுடமாகக் கட்டப்பட்ட அழகிய நீண்ட சடையையுடையவனது தில்லையையொப்பாடன்னுடைய காதலன்; பொய் போல் இடை போய் இறும் எனப் பூண் இட்டு அணியான் - பொய்போலுமிடை போயிறுமென்று கருதிப் பூணைப் பூட்டி யணியான்; தவிசின் மலர் அன்றி மிதிப்பக் கொடான்-மெல்லடி நோதலஞ்சித் தவிசின் மிதிப்புழியும் மலரினன்றி மிதிப்பவிடான்; வண்டு உறுதல் அஞ்சி மட்டு அணிவார் குழல் மலர் வையான் - வண்டுற்று மொய்த்தலஞ்சித் தேனையுடைய வழகிய வார்குழலிடத்து மலர்களை வையான்; இவை சொல்லுகின்றதென்; நுதல் பொட்டு