மட
மணஞ் சிறப்புரைத்தல்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.
303
19.6 கற்பறிவித்தல்
கற்பறிவித்தல் என்பது தலைமகனது
காதன்மிகுதி கூறின செவிலி, அதுகிடக்க, அவளவனையொழிய வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக்
கருதாளாதலான், அவன் றன்னைவணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறைகொள்ளச் சென்றாலுந் திறை
கொண்டுவந்து அவளதில்லத்தல்லது ஆண்டுத் தங்கியறியான்; இஃதவரதியல்பெனக் கூறி நற்றாய்க்குத்
தலைமகளது கற்பறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்-
304. தெய்வம் பணிகழ
லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
_____________________________________________________________
அணியான் - பொறையாமென்று நுதலின்கட்
பொட்டையுமிடான் எ-று.
கட்டணி வார்சடையென்பதற்கு
மிக்க அழகையுடைய சடையெனினுமமையும். தவிசின் மிசையென்று பாடமோது
வாருமுளர்.
303
19.6. விற்பொலி நுதலி
கற்பறி வித்தது.
இதன் பொருள்: தெய்வம்
பணி கழலோன் தில்லைச் சிற்றம்பலம் அனையாள் - பிறரான் வழிபடப்படுந் தெய்வங்கள் வணங்குந்
திருவடிகளையுடையவனது தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாள்; என்றும் தெய்வம் பணிந்து அறியாள்
- எஞ்ஞான்றும் வேறொரு தெய்வத்தைப் பணிந்தறியாள்; நின்று திறை வழங்காத் தெவ்வம் பணியச்
சென்றாலும்-முன்னின்று திறைகொடாத பகைவர் வந்து பணியும்வண்ணம் வினைவயிற் சென்றாலும்; மன்
வந்து அன்றிச் சேர்ந்து அறியான் - அம்மன்னவன் அவளதில்லத்து வந்தல்லது ஆண்டுத்தங்கியறியான்;
பௌவம் பணிமணி அன்னார் பரிசு இன்ன பான்மைகள் - பௌவந்தந்த மணிபோலப் பெருங் குலத்துப்பிறந்த
|