New Page 1
மணஞ் சிறப்புரைத்தல்
தெவ்வம் பணியச்சென்
றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.
304
19.7 கற்புப் பயப்புரைத்தல்
கற்புப் பயப்புரைத்தல் என்பது கற்பறிவித்த
செவிலி, அவள் அவனையொழிய வணங்காமையின் அவனூருங்களிறும் வினைவயிற்சென்றால் அவ்வினை முடித்துக்
கொடுத்து வந்து தன் பந்தியிடத்தல்லது ஆண்டுத்தங்காதாதலான், அவளது கற்பு, அந்திக் காலத்து
வடமீனையும் வெல்லுமென அவளது கற்புப் பயந்தமை நற்றாய்க்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
305. சிற்பந் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
_______________________________________________________________
தூயோரதியல்பு
இன்ன முறைமைகளை யுடைய எ-று.
தெவ்வு: தெவ்வமென விரிக்கும்வழி
விரித்து நின்றது. தெவ்வம்பணியச் சென்றாலு மென்பதற்குத் தெவ்வர் அம்பையணிய வென்றும், பௌவம்
பணி மணி யென்பதற்குக் கடலிடத்தும் பரம்பிடத்து முளவாகிய முத்தும் மாணிக்கமுமென்று முரைப்பாருமுளர்.
விற்பொலி நுதலி-விற்போலு நுதலி.
304
19.7. கற்புப் பயந்த
அற்புத முரைத்தது.
இதன் பொருள்: சிற்பம்
திகழ்தரு திண் மதில் தில்லை - நுண்டொழில் விளங்குந் திண்ணிய மதிலையுடைய தில்லையின்;
சிற்றம்பலத்துப் பொற் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் கற்பு-சிற்றம்பலத்தின்கணுளனாகிய
பொற்றகட்டு நிரைபோலுஞ் சடையையுடையவனது பூவணத்தையொக்கும் பொன்னினது கற்பு; அந்தி வாய்
வடமீனும் கடக்கும் - அந்திக் காலத்துளதாகிய வடமீனையும் வெல்லும்; அதனான், அவன் ஈர்ங்களிறு
- எடுத்துக்கொண்டவினையை யிடையூறின்றி யினிதின் முடித்து அவனூரும் மதத்தானீரியகளிறு; படி கடந்தும்
இல் பந்தி வாய்
|