கற
மணஞ் சிறப்புரைத்தல்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.
305
19.8 மருவுதலுரைத்தல்
மருவுதலுரைத்தல் என்பது கற்புப்
பயப்புரைத்த செவிலி, வேந்தற்குற்றுழிப் பிரியினும் அவனூருந்தேரும் வினைமுடித்துத் தன்னிலையி
னல்லது புறத்துத் தங்காது; அவளும் அவனை யொழிய மற்றோர் தெய்வமும் மனத்தானு நினைந்தறியாள்;
இஃதிவர் காதலென அவ்விருவர்காதலு மருவுதல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
306. மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
___________________________________________________________
அன்றி வைகல் செல்லாது - நிலத்தைக்கடந்தும்
இல்லின்கட்டன் பந்தியிடத்தல்லது தங்காது எ-று.
பொற்பந்தியன்ன சடையென்பதற்கு
அழகிய அந்திவானம் போலுஞ் சடையென்பாருமுளர். அந்திக்காலத்துக் கற்புடைமகளிராற் றொழப்படுதலின்,
அந்திவாய் வடமீனென் றாள். கற்புப்பயந்த வற்புதமாவது படிகடந்துங் கடிது வரும்வண்ணம் எடுத்துக்
கொண்ட வினையை யிடையூறின்றி யினிது முடித்தல்.
305
19.8. இருவர் காதலும்
மருவுத லுரைத்தது
இதன் பொருள்: மன்னவன்
தெம் முனை மேல் செல்லும் ஆயினும்-மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; மால் அரி
ஏறு அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது-பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலையினல்லது
புறத்துத் தங்காது; வரகுணன் ஆம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்-வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ்
சிற்றம்பலத்தின் கண்ணான்; மற்றைத் தேவர்க்கு எல்லாம் முன்னவன்-தானல்லாத வரியயன்முதலாகிய
தேவர்க்கெல்லாம்
|