பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
511

New Page 1

மணஞ் சிறப்புரைத்தல்

    தென்னவ னேத்துசிற் றம்பலத்
        தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
    முன்னவன் மூவலன் னாளுமற்
        றோர்தெய்வ முன்னலளே.

306

19.9 கலவியின்பங் கூறல்

   
கலவியின்பங் கூறல் என்பது இருவர்காதலு மருவுதல் கூறின செவிலி, இவ்விருவருடைய காதலுங் களிப்பும், இன்பவெள்ளத்திடை யழுந்தப் புகுகின்றதோ ருயிர் ஓருடம்பாற்றுய்த்தலாராமையான் இரண்டுடம்பைக் கொண்டு, அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து, திளைத்ததனோடொக்கும், அதுவன்றி அவ்வின்ப வெள்ளம் ஒருகாலத்தும் வற்றுவதும் முற்றுவதுஞ் செய்யாதென நற்றாய்க்கு அவரது கலவி யின்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

307. ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
        ஆருயிர் ஈருருக்கொண்
    டானந்த வெள்ளத் திடைத்திளைத்
        தாலொக்கும் அம்பலஞ்சேர்

______________________________________________________________

முன்னே யுள்ளான்; மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலள்-அவளது மூவலை யொப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள் எ-று.

மற்றெத் தேவர்கட்கு மென்பதூஉம் பாடம்.

306

19.9.  நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
     மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது.

   
இதன் பொருள்: ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஓர் ஆர் உயிர்-இருவரது காதலுங்களிப்பும் இன்பவெள்ளத்திடையழுந்தப் புகுகின்ற தோருயிர்; ஈர் உருக்கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் - ஓருடம்பாற்றுய்த்தலாராமையின் இரண் டுடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோ டொக்கும்; அதுவேயு மன்றி, அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் - அம்பலத்தைச் சேர்ந்த வின்பவெள்ளத்தைச் செய்யு மொலிக்குங் கழலையுடைத்தாகிய திருவடியையுடைய