எய
உரைமாட்சி
எய்தியது’ (366) என்றும்,
‘மலர்நெடுங்கண்ணி புலவியுற்றது’ (367) என்றும், ‘தாரவன், தன்மை கண்டு பின்னுந்தளர்ந்தது’
(397) என்றும், வருவனவற்றைத் துறைகூறியனவாகக் குறிப்பிடுவர் உரையாசிரியர். கிளவிகளுக்குூம
துறைகளுக்கும் விளக்கம் கூறும் இயல்பில் பேராசிரியருடைய புலமை சிறப்பாக வெளிப்படுகிறது.
சிறந்த உரையாசிரியர் :
நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருக்கு
உரை எழுதியதன் வாயிலாகப் பேராசிரியர் தம்முடைய பழுத்த இலக்கண, இலக்கிய சாத்திரப்
புலமையை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த உரையாசிரியரிடம் நாம் காண விழையும் நலன்கள்
யாவும் இவர் உரையில் மிளிர்கின்றன.
பாடவேறுபாடுகள் :
பழங்காலத்தில் பெரும்பான்மையவாய
நூல்களைத் தமிழ்ச் சான்றோர் மனப்பாடம் செய்துகொண்டு மற்றவருக்குக் கற்பித்து வந்தனர்.
பாடல்களின் யாப்பிற்கும் பொருளுக்கும் ஊறு வாராத வகையில், மனப்பாடம் செய்யும் போது பாடங்களில்
சிற்சில வேறுபாடுகள், தோன்றுவது இயல்பே. ஒரு நூல் பலராலும், பயிலப்பட்டுப் பிரபலமாக இருந்தால்,
அந்நூலில் அதிகப் பாடவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.
கோவைக்கு உரிய இலக்கணம் செவ்விதின்
அமையப்பெற்று, நானூறு என்ற வரையறை உடைய பாடல்களான் இயன்ற திருக்கோவையாரின் சொற்சுவை
பொருட் சுவைகளில் ஈடுபட்ட சான்றவர் நாவில் பலகாலும் பயின்ற பாடல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட
பாடவேறுபாடுகள் பேராசிரியரால் குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பாட வேறுபாடுகள் தள்ளத்தக்கன அல்ல;
கொள்ளத்தக்கனவே என்பதே பேராசிரியரின் கருத்தாகும். அவற்றுள் மிக எளியவாக உள்ள ஒரு சிலவற்றை
விடுத்து எஞ்சிய வேறுபாடுகளுக்கெல்லாம் பொருத்தமான உரையும் அவரால் வரையப்பட்டுள்ளது.
மேற்கோள் ஆட்சி :
திருக்கோவையார் தோன்றிய
காலத்தில் தொல்காப்பியமும், இறையனார் அகப்பொருளும் அதன் உரையுமே தமிழகத்தில் பயிலப்பட்டன.
ஆகவே, பேராசிரியர் தொல்காப்பியத்தையும், இறையனார் அகப்பொருளையும் மேற்கோள் காட்டியும்,
இறையனார் அகப்பொருள் உரைச்செய்திகளைக் கிளவித் தலைப்புக்களின் விளக்கத்திலும், கிளவித்தொகைகளின்
நூற
|