பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
513

20

20. ஓதற்பிரிவு

இனிஓதற்பிரிவு என்பது வரைந்துகொண்ட பின்னர்த் தலைமகனுக்கு முதற்பிரிவு ஓதலாதலாற் கல்வியின் மிகுதி கூறி நீங்காநிற்றல், என்னை?

    “ஓதல் காவல் பகைதணி வினையே
     வேந்தற் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
     றாங்க வாறே யவ்வயிற் பிரிவே”

(இறையனாரகப் பொருள். 35) என்றோதப்படுதலின், முதற் பிரிவோதலாயிற்று, என்னை? இவ்வண்ணம் முன்னரோதலின்றி இவளை வரைந்த பின்னர் ஓத நின்றானோவெனின், அல்லன், முன்னரிவனைப் பொருவிறந்தா னென்று கூறப்படுதலால் ஓதி முடித்தானென்பது, இவன் தானோதிய புருடார்த்தமாகிய தருமார்த்த காமங்களையொழிய வேறும் புருடார்த்தமாகக் கூறப்படுவன உளவோவென்பதனை யாராய வேண்டுங் கருத்தினனாதலானும், கல்வியாற்றன்னிற் றாழ்ந்தாரைத் தனது கல்விமிகுதி காட்டி அவர்களை யறிவித்தல் தருமநூல் விதியாதலானும் பிரியுமென்பவாகலின். அதுவருமாறு-

    கல்விநலங் கூறல் பிரிவுநினை வுரைத்தல்
    கலக்கங்கண் டுரைத்தல் காதலர் தமது
    வாய்மொழி கூறல் வருவன நான்குந்
    தீமையில் கல்வி தேருங் காலே.

______________________________________________________________

    ஓதற்பிரிவு-இதன் பொருள்: கல்விநலங்கூறல். பிரிவுநினைவுரைத்தல், கலக்கங்கண்டுரைத்தல், வாய்மொழிகூறித் தலைமகள்வருந்தல் என விவை நான்கும் ஓதற்பிரிவாம் எ-று. அவற்றுள்-