20
ஓதற்
பிரிவு
20.2 பிரிவு நினைவுரைத்தல்
பிரிவுநினைவுரைத்தல் என்பது கல்விநலங்
கேட்ட தோழிஅவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவுங் கற்றோர் நன்மைக் கெதிரில்லாத தன்மையராவரென்பதனை
யுட்கொண்டு, நின்புணர்முலையுற்றபுரவலர், அழற்கானத்தே போய்க் கல்வியான் மிக்காரைக் கிட்டி
அவரோடு உசாவித் தங்கல்வி மிகுதி புலப்படுத்தப் பிரியா நின்றாரெனத் தலைமகன் ஓதுதற்குப்
பிரிவு நினைந்தமை தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
309. வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
____________________________________________________________
தலைமகனது குறிப்பைக் கண்டு தோழி
தலைமகட்குக் குறிப்பினாற் கூறினாளாகவுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பிரிவுணர்த்தல்.
308
20.2. கல்விக் ககல்வர் செல்வத்
தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப்
பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: செல்வீ -
செல்வீ; வீதல் உற்றார் தலை மாலையன் -கெடுதலையடைந்தவர் தலையானியன்ற மாலையை யுடையான்; தில்லைமிக்கோன்
- தில்லைக் கணுளனாகிய பெரியோன்; கழற்கே காதல் உற்றார் நன்மை கல்வி தரும் என்பது கொண்டு
- அவனுடைய திருவடிக்கே யன்புற்றாரது நன்மையைக் கல்வி தருமென்பதனைக் கருதி; ஓதல் உற்றார் உற்று
- ஓதுதலான் மிக்காரைக் கிடைத்து; உணர்தல் உற்றார் - எல்லா நூல்களையு முணர்தலுற்று; நின்புணர்
முலை உற்ற புரவலர் - நின்புணர் முலையைச் சேர்ந்த புரவலர்; செல்லல் மல் அழல் கான் போதல்
உற்றார்-இன்னாமையைச் செய்யும் மிக்க வழலையுடைய கானகத்தைப் போகநினைந்தார் எ-று.
ஓத்தான் உயர்ந்தாரைக்
கிடைத்து அவரோடுசாவித் தமது கல்விமிகுதியை யறியலுற்றா ரென்றுரைப்பாருமுளர். உணர்தலுற்றாரென்பதனை
முற்றாகவுரைப் பினுமமையும். நின்புணர் முலையுற்ற
|