பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
516

New Page 1

ஓதற் பிரிவு

    டோதலுற் றாருற் றுணர்தலுற்
        றார்செல்லல் மல்லழற்கான்
    போதலுற் றார்நின் புணர்முலை
        யுற்ற புரவலரே.

309

20.3 கலக்கங்கண்டுரைத்தல்

   
கலக்கங்கண்டுரைத்தல் என்பது பிரிவுநினை வுரைப்பக் கேட்ட தலைமகளது கலக்கங்கண்ட தோழி, அன்பர் சொற்பா விரும்பினரென்ன, அச்சொல் இவள் செவிக்கட் காய்ந்தவேல் போலச் சென்றெய்திற்று; இனி மற்றுள்ள பிரிவை எங்ஙனமாற்று வளெனத் தன்னுள்ளே கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

310. கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
        பலமது காதல்செய்த
    விற்பா விலங்கலெங் கோனை
        விரும்பலர் போல அன்பர்

___________________________________________________________

வென்றதனான், முலையிடத்துத் துயிலை நினைந்து நீட்டியாது வருவரென்றும், புரவலரென்றதனான். நின்னலந் தொலையாமற் காப்பரென்றுங் கூறிப் பிரிவுடம்படுத்தாளாம். செல்வத்தவரென்றது ஈண்டுத் தலைமகனை. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்தல்.

309

20.3.  ஓதற் ககல்வர் மேதக் கவரெனப்
      பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது.


   
இதன் பொருள்: கல் பா மதில் தில்லைச் சிற்றம்பலமது காதல் செய்த-கல்லாற் செய்யப்பட்ட பரந்த மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில் பா விலங்கல் எங்கோனை விரும்பலர் போல - வில்லாகச் செய்யப்பட்ட பரந்த மலையையுடைய எம்முடையகோனை விரும்பாதாரைப் போல; அன்பர் சொல் பா விரும்பினர் என்ன - நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல; மெல்லோதி செவிப் புறத்து - அச்சொல் மெல்லோதியையுடையாளது செவிக்கண்; கொல் பா இலங்கு இலை வேல் குளித்தாங்குக் குறுகியது - கொற்றொழில் பரந்த விளங்குமிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று; இனிப் பிரிவை யெங்ஙனமாற்றுமோ! எ-று.