பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
517

New Page 1

ஓதற் பிரிவு

    சொற்பா விரும்பின ரென்னமெல்
        லோதி செவிப்புறத்துக்
    கொற்பா இலங்கிலை வேல்குளித்
        தாங்குக் குறுகியதே.

310

20.4 வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல்

   
வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என்பது கலக்கங் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரிவுமாற்றேனென்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாஞ்சொல்லுவதென்னோவெனத் தலைமகனது வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

311. பிரியா மையுமுயி ரொன்றா
        வதும்பிரி யிற்பெரிதுந்
    தரியா மையுமொருங் கேநின்று
        சாற்றினர் தையல்மெய்யிற்

_______________________________________________

பொருப்புவில்லி மேல் விருப்புடையார் கல்விக் கடனீந்தி வருந்தாமையின் விரும்பலர்போலச் சொற்பாவிரும்பின ரென்றாள். இனி வருந்தவென்பதோர் சொல்லைவிரித்து விரும்பலர் போல வருந்த அச்சொற்குறுகியதென் றுரைப்பினுமமையும். பூங்கொடி கலக்கம் பாங்கி தன்னுள்ளே சொல்லியது; தலைமகற்குக் கூறியதென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல்.

310

20.4.  தீதறுகல்விக்குச் செல்வன்செல்லுமெனப்
      போதுறுகுழலி புலம்பியது.

   
இதன் பொருள்: தையல் மெய்யின் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர் - தையலாடனது திருமேனியி னின்றும் பிரியாமையைச் செய்து நின்றவனது தில்லையிற் பெருந்தன்மையை யுடைய வூரர்; பிரியாமையும் - நம்மிற்பிரியாமையையும்; உயிர் ஒன்றாவதும் -இருவருக்கு முயிரொன்றாதலையும்; பிரியின் பெரிதும் தரியாமையும் - பிரியிற்பெரிது மாற்றாமையையும்; ஒருங்கே நின்று சாற்றினர் - ஒருங்கே அக்காலத்து நம் முன்னின்று கூறினார்; அன்ன புரியாமையும் இதுவே -இப்பொழுது அவற்றுட் பிரியாமை.