| ப 
ஓதற்
பிரிவு 
    பிரியாமை செய்துநின்
றோன்தில்லைப்பேரிய லூரரன்ன
 புரியா மையுமிது வேயினி
 யென்னாம் புகல்வதுவே.
 
311 
______________________________________________________________ 
பொய்யாகக் கண்டமையின் உயி்ர்
வேறுபடக்கருதுதலும் பிரிவாற்றுதலுமாகிய அன்னவற்றைச் செய்யாமையும் இப்பிரியாமையோடொக்கும்;
இனி நாம் புகல்வது என் - இனிநாஞ்சொல்வதென்! எ-று.
 தையன்மெய்யிற் பிரியாத பேரன்பினோனது
தில்லைக்கட் பயின்றும் அன்புபேணாது பிரிதல் எங்ஙனம் வல்லராயினாரென்னுங் கருத்தால்,
பிரியாமைசெய்து நின்றோன் றில்லைப் பேரியலூரரென்றாள், பிரிவுகாணப்பட்டமையின், அன்னவென்றது
ஒழிந்த விரண்டையுமேயாம். அன்னபுரியாமையு மிதுவேயென்பதற்குப் பிரிவுமுதலாகிய நமக்கின்னாதவற்றைத்
தாம் செய்யாமையுமிதுவே யாயிருந்ததெனினு மமையும். இன்னல் பிரியாமையுமிதுவேயென்று பாடமோதுவாரு
முளர். மெய்ப்பாடும், பயனும் அவை.
 
311 
ஓதற்பிரிவு முற்றிற்று. |